'குர்ஆனையோ அதன் கருத்துக்களையோ எடுத்துச்சொல்ல சரியான காலம் வந்துள்ளது'
(ஜே.எம்.ஹபீஸ்)
ஒரு நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்களாக வாழ்பவர்களிடத்தில் பண்புசார் மாற்றமும் பொறுமையும் இல்லாத விடத்து சுவர்கத்தை அடைவது கடினமான காரியமாகும் என சலாமா மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் சீராவிற்கான சூடான் பல்கலைக்கழக உயர் டிப்லோமா பட்டதாரியுமான அஷ்ஷேக் எம்.ஏ.அனஸ் முஹம்மட் (நளீமி) தெரிவித்தார்.
(29.3.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் சமுக மூலதன விருத்திக்கான அமைப்பு ஒழுங்கு செய்த 'சிறுபான்மை சமூகத்தின் பொறுப்புக்களும் கடமைகளும்' என்ற தலைப்பில் இடம் பெற்ற விசேட சொற்பொழிவு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். பெருமளவு முஸ்லீம்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லீம்கள் 100 சதவீதம் வாழும் ஒரு நாட்டில் அல்லது பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் ஒரு நாட்டில் உள்ள இஸ்லாமிய வாழ்கை முறையுடன் ஒப்பிடும் போது முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் உள்ள முஸ்லீம்களின் வாழ்கை சற்று வித்தியாசமானது. எனவே சிறுபான்மையாக முஸ்லீம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு குர்ஆனிலும் ரஸூல் (ஸல்) அவர்களது வாழ்விலும் எத்தனையோ உதாரணங்கள் தாராளமாக உள்ளன.
திருக்குர்ஆனைப் பொருத்தவரை சூரத்துல் கஹ்ப்ல் குறிப்பிடப்பட்டுள்ள குகை வாசிகளின் சம்பவம், சூரா யூசுப்ல் குறிப்பிடப் பட்டுள்ள நபி யூசுப் (அலை) அவர்களது பல்வேறு சம்பவங்கள், நபி மூஸா (அலை) அவர்கள் பற்றிய சரித்திரம், நூஹ் நபியவர்கள் பற்றிய சரித்திரம், என்பவற்றில் ஒரு சில உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
குகை வாசிகளளைப் பொருத்தவரை 5முதல் 7 பேர்வரை இருந்திருக்கலாம் அல்லது அது அல்லாஹ்விற்குத்தான் தெரியும் என்ற இருகருத்துக்களும் நிலவு கின்றன. அவர்கள் 300 வருடம் குகையில் தொடர்ந்து தூக்கிய வரலாற்றையும் குகையில் காவலுக்கிருந்த பயங்கர மிருகம் பற்றிய சரித்தரத்தையும் வாசித்துப் பாருங்கள். அந்த குகைவாசிகள் தீனுக்காக தமது உயிரை விட்டிருக்கலாம். நாம் அதை சஹீத்கள் என்று கூறியிருக்கலாம். அப்படியல்ல. அவர்கள் தமது ஈமானை மற்றவர்களுக்கும் எத்திவைக்க குகையில் ஓடி ஒழித்தார்கள். இது கோழைத்தன மல்ல. 300 வருடங்களின் பின் முழு நாட்டு மக்களும். தீனின்பால் திரும்ப அவர்களது 300 வருட உறக்கம் காரணமாகியது.
இதேபோல் யூசப் (அலை) அரச மாளிகையிலும் சிறைக்கைதியாக இருந்த போது சிறைக்குள்ளும் ஒழுங்கமைத்த சிருபான்மை குழுவானது தம் உயிரைப் பாதுகாத்துக் கொண்டதன் இறுதி வெற்றியை அறிவோம். கொடிய பஞ்சத்தின் போது யூசப் நபி மேற்கொண்ட நடவடிக்கை, அரசனின் மரணத்தின் பின் யூசுப் நபி அவர்களை அரசானாக்கியது மட்டுல்லாது நாட்டு மக்கள் அனைவரும் தீனுல் இஸ்லாத்தில் பிரவேசிக்க ஏதுவானது.
அதேபோல் மூஸா நபியின் சரித்திரம் அமைகிறது. பிர்அவுன் மூஸா நபியை கொள்வதற்கு உத்தரவு பிரபித்த போது அவர் தப்பிச் சென்றது கோழைத்தன மல்ல. இதன் காரணமாகவே மூஸா நபியின் வெற்றி அமைந்தது. இது சாதாரண சவால் அல்ல. ஒருவனைப் பார்த்து உன்னைக் கொள்வேன் என்று அரசன் உத்தரவிட்டால் அது தான் ஆகக் கூடிய தண்டனை. ஆனால் நபி மூஸா அவர்களுக்கோ பிறந்தாலே கொண்டு விடுவேன் என்ற சவால் விட்டதற்குப் பிறகு பிறந்து வளர்ந்து அவர் இறை தூதை எத்திவைத்தது சிறுபான்மையாக இருந்து கொண்டு தான்.
இதனை அன்று சிறுபான்மையாக வாழ்ந்த பிர்அவ்னின் மனைவி, மூஸா நபியின் தாயார், மூஸா நபியின் மூத்த சகோதரி ஆகியோர்களின் பொறுமை,சகிப்பு ஆகிய வற்றின் மூலம் அடைய முடிந்தது.
இதை விட நபி நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்தார்கள். அவர் ஒருவருடத்திற்கு ஒருவர் வீதம் தீன் மார்க்கத்தின் பால் இழுத்திருந்தால் கூட சுமார் 950 பேர் அவர் பக்கம் வந்திருக்க சந்தர்hப்பம் இருந்தது. ஆனால் அவரது போதனைகளைக் கேட்டு சுமார் 80 பேர் மட்டுமே தீனின் பால் திரும்பினர். இதன் காரணமாக நபி மூஸா அவர்களின் பிராத்தனையின் அடிப்படையில் இறைவன் கப்பல் கட்டும் பணியை ஒப்படைத்தான் இந்த நவீன காலத்தில் கூட சில சர்வதேசக் கம்பணிகள் ஒரு வருடத்திற்கு ஓரிரண்டு கப்பல்களை மட்டும் அல்லது அதிலும் குறைவாகவே கண்டி முடிக்கின்றன. நபி மூஸா (அலை) அவர்கள் கடடிய கப்பலில் உலகத்தில் உள்ள அனைத்து உயிர் களதும் குறைந்தது ஒரு சோடியாவது ஏற்றப்பட்டன. இதற்கு எவ்வளவு பொறுமை சகிப்புத்தன்மை தேவை.
இப்படி குர் ஆனில் பல்வேறு ஆதாரங்களை நாம் தேட முடியும். இதன் சுருக்கம் பொறுமை, சகிப்பு, முன்மதரியான நடத்தை, பண்புசார் நடத்தை போன்றவையே வெற்றிக்கு வழி சமைத்துல்லது. அதேபோல் நபியவர்கள் காலத்தில் சஹாபாத் தோழர்களை அபுதாலிப் பல்லத்தாக்கில் சிறைவைத்து பொருளாதாரத் தடைவிதித்தனர் மதீனாவிற்கான ஹிஜ்ரத் போன்ற சம்பவங்கள் பொறுமை, சகிப்புத் தன்மை, பெருந்தன்மை என்பவற்றையே சுட்டிக் காட்டுகிறது. இது கோழைத்தனம் என்று எவரும் கூறமுடியாது.
இதேபோல் எம் மத்தியிலும் விவேகம் தேவை. சிறுபான்மை எனும்போது மிக ஆழமாகச் சிந்தித்து எமது பண்புசார் நடத்தை மூலமே பிறமத நண்பர்களது மனதை வெல்ல வேண்டும்.
முன்பு ஒரு காலம் இருந்தது. இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல முடியாது. சில வேளை தாக்கி விடுவர் என்ற அச்சம் காணப்பட்டது. இன்று நிலைமை வேறு. பௌத்த சமயத் தவைர்களே குர்ஆன் பிரதிகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். குர்ஆனைக் காட்டி சவால் விடுகிறார்கள். எனவே இப்போது குர்ஆனையோ அதன் கருத்துக்களையோ எடுத்துச் சொல்ல சரியான காலம் வந்துள்ளது. ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன? ஷரீஆ சட்டம் என்றால என்ன? பர்தவா? புர்காவா? ஹிஜாபா? சம்பிரதாய உடையா? என்று பிற மதத்தவர்கள் தேடும் அளவிற்கு நிலைமை உள்ளது.
எனவே எமது முன்மாதரியான வாழ்வின் மூலமே இன்றைய சூழ் நிலையில் வெற்றிகாண முடியும். சரியான விளக்கத்தை வழங்க அல்லா வழியைத் திறந்து வைத்துள்ளான். அதைப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த கட்டம் விபரீதமானது. அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக என்றார்.
Construction of vessel and to consider to take board each and every pair of creatures have reference to Prophet Noah and and to Moses.
ReplyDelete“18:22 سَيَقُولُونَ ثَلَاثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ ۖ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ ۚ قُل رَّبِّي أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ ۗ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَاءً ظَاهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا
ReplyDelete18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.“
குகை வாசிகளின் எண்ணிக்கை தொடர்பாக குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தை இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, நளீமி அவர்களின் பேச்சின் கருப்பொருளை விமர்சிப்பதற்காக அல்ல. குகைவாசிகளைப்பற்றி கூறும்போது ”குகை வாசிகளளைப் பொருத்தவரை 5முதல் 7 பேர்வரை இருந்திருக்கலாம் அல்லது அது அல்லாஹ்விற்குத்தான் தெரியும் என்ற இருகருத்துக்களும் நிலவு கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்லாஹ் தெளிவாக சொல்லியிருக்க “இருகருத்துக்களும் நிலவு கின்றன“ என்று சந்தேகத்துக்கிடமான முறையில் கூறியிருப்பது எனக்கு என்னவே போலிருந்தது. அதாவது குர்அனில் உள்ளதை உள்ளபடி கூறவேண்டும் என்பதே எனது கருத்தாகும். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.