Header Ads



ஆசிரியைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு



(அனா)

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கர்ப்பப்பை புற்று நோய் தொடர்பாக ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இன்று (20.03.2013) இடம் பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரீக் தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் திருக்குமரன் கலந்து கொண்டு கர்ப்பப்பை புற்று நோய் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளின் ஆசிரியைகள் பயனாளிகளாக கலந்து கொண்ட கருத்தரங்கில் கோறளைப்பற்று மத்தி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் மற்றும் அஸ்ஹர் வித்தியாலய அதிபர் அம்.ஹப்பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.