குருநாகல் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு (படங்கள்)
(இ. அம்மார்)
குருநாகல் மாவட்ட ஜும்மியதுல் உலமாவின் ஏற்பாட்டில் சமீபகாலமாக குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்து ஆராயும் முகமாக குருநாகல் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு குருநாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலில் 17 -03 -2013 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் முஸ்லிம் கவுன்சிலின் தலைவருமான என்.எம் அமீன், ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவின் பொறுப்பாளர் மௌலிவி முர்ஷpத், குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh, உயர் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், வை. எல். எம். நவவி, குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி சித்தீக் ஆகியோர் உரை நிகழ்த்துவதைப் படங்களில் காணலாம்.
அல் ஹம்துலில்லாஹ், நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பேதங்கள் மறந்து முஸ்லிம்கள் இவ்வாறு ஒன்று கூடி விவேகமாகவும் நிதானமாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ReplyDelete