ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் முதல் விமானமாக எயார் அரேபியா தரையிறங்கும்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் 18-03-2013 காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை மத்தளவில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதுடன் இலங்கை விமானி ஒருவரினால் செலுத்தப்படும் எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான ஜீ 9508 ரக பயணிகள் விமானம் முதல் விமானமாக தரையிறங்குகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகை தரவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது. இவ் விமான நிலைய வேலைகள் 2010ஆம் ஆண்டு முதல் சைனா ஹாபர் பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தையும் விட 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கூடுதலாக கொண்டதான ஓடுபாதை இங்கு அமைக் கப்பட்டுள்ளது. 45 மீற்றர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக அமையவுள்ள ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கென 2000 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
19-03-2013 முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும். tv
through the history of sri lanka capitals went to south side of sri lanka .....
ReplyDeleteஎன்ன பொது பல்லா சேனா முதன் முதலாக தரையிரங்கும் விமானம் அடிப்படைவாதிகளின் விமானமாமே? ஆர்ப்பாட்டம் செய்யவில்லையா?
ReplyDeleteஹலால் விமானம்!!!
ReplyDeleteநாடு இப்ப இருக்கிற பொருளாதார நிலைக்கு இது கட்டாயம் தேவையா?
ReplyDeleteenga nadu irikira nelamaikku makkalda koadikanakkana salliyala innoru airport thevaya? intha salliya waithu arisi, seeni, ma, paruppu ponra adippadai samangalin vilaya koracha koadikanakkana makkal santhosappadum illaya?
ReplyDeleteஅதற்கும் அறபு நாடுதான் வேண்டுமா? ஏன் சீனா மறுத்துவிட்டதோ...?
ReplyDelete