பௌத்த குருமார்களை பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டுவதாக குற்றச்சாட்டு
சீனாவை கண்டித்து தீக்குளிக்க புத்தமத துறவிகளுக்கு பணம் கொடுத்து தலாய் லாமா தூண்டுகிறார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை விடுவித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று புத்தமதத்தினர் போராடி வருகின்றனர். புத்தமதத் தலைவர் தலாய் லாமா, திபெத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், சீனாவின் அடுக்குமுறையை கண்டித்து இளம் புத்த துறவிகள் பலர் தொடர்ந்து தீக்குளித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட துறவிகள் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இதனால் சீனாவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்நிலையில், சீனா நியமித்துள்ள திபெத் தலைவர் பத்மா சோலிங் கூறியதாவது: தீக்குளிப்பது ஒழுக்க கேடானது. சட்ட விரோதமானது. மனிதாபிமானமற்ற செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தவோ தலாய் லாமா போன்ற புத்தமதத் தலைவர்கள் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதில் பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டி வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இவ்வாறு பத்மா சோலிங் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை கண்டித்து திபெத்தின் சிசுவான், கன்சு, கியுன்காய் பகுதிகளை சேர்ந்த துறவிகள்தான் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
Post a Comment