Header Ads



மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை


உலகம் முழுவதும் கல்லீரல் பாதிப்பால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தானம் மூலம் கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 13 ஆயிரம் பேருக்கு கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது. 

அவர்கள் தவிர கல்லீரல் தானம் பெற 30 ஆயிரம் பேர் காத்து கிடக்கின்றனர். அதனால் அவர்களில் 25 சதவீதம் பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக ஒருவரது உடலில் இருந்து தானமாக பெறப்படும் கல்லீரல் ஐஸ்கட்டிக்குள் குளிர்ச்சியாக வைத்து பாதுகாக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்டவர் உடலில் பொருத்தப்படுகிறது. 

தற்போது புதுவிதமாக ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் கல்லீரல் ஐஸ்சுக்குள் வைக்காமல் வெளியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதாவது 24 மணி நேரம் இளஞ்சூடு தட்பவெப்ப நிலையில் வைத்திருந்து பின்னர் தானம் பெறுபவரின் உடலில் ஆபரேசன் மூலம் பொருத்தி இயங்க வைத்துள்ளனர். 

இச்சாதனையை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கிங்ஸ் மருத்துவக் கல்லூரியின் டாக்டர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதற்காக 15 ஆண்டுகள் அரும்பாடுபட்டு ஒரு எந்திரத்தை தயாரித்துள்ளனர். அதில், தானம் கொடுப்பவரின்உடல் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தவாறு கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது. 

அப்போது கல்லீரலுக்கு தேவையான சிவப்பணுக்களும், ஆக்சிஜனுக்கு செலுத்தப்பட்டு கெட்டு போகாமல் பத்திரப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.