ஸ்ரீதலதா மாளிகையின் படத்தை வைத்திருந்த முஸ்லிம் சகோதரர் கைது
(Tm) கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தொன்மை வாய்ந்த படமொன்றை ஓய்வு விடுதியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு செய்த முறைபாட்டையடுத்து பொலிஸார் குறித்த விடுதியை சோதனைக்கு உட்படுத்தி அந்த படத்தை கைப்பற்றியுள்ளனர். விடுதியின் உரிமையாளர் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை மீவத்துர எனும் பகுதியில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஓய்வு விடுதியிலிருந்தே சுமார் 26 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்ரீதலதா மாளிகையின் படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விடுதியின் உரிமையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டதுடன், அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.அத்துடன் எதிர்வரும் 7 ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பொலிஸார் பணித்துள்ளனர்.
நமக்கேன் தலதா மாளிகை படம்!!
ReplyDelete