பஷர்-அல்ஆசாத்தை ஆதரித்து கவிதைபாடிய நடிகைக்கு உதை - எகிப்தில் சம்பவம்
சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத்தை ஆதரித்து கவிதை வாசித்த சிரியா நடிகையை அதிபரின் எதிர்ப்பாளர்கள் தாக்கியுள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள கேளிக்கை அரங்கத்தில் கவியரங்க விழாவிற்கு எகிப்து அரசின் கலாசார துறை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிரியா நடிகை ரக்தா பங்கேற்றார்.
வெறும் பார்வையாளராக மட்டுமே பங்கேற்க வந்த அவர், கவியரங்கத்தில் பலர் கவிதை வாசிப்பதை கண்டு, தனக்கும் கவிதை வாசிக்க வாய்ப்பளிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, மேடையேறிய ரக்தா, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தை மிகவும் புகழ்ந்து கவிதை வாசித்தார். மேலும், சிரியாவில் இருந்து அகதிகளாக வந்து எகிப்தில் தஞ்சமடைந்துள்ள பெண்களை அவர் கேவலமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மேடை மீது ஏறி நடிகை ரக்தாவை அடித்து உதைத்தனர். அப்போது நடிகையின் பாதுகாவலர்களுக்கும், நடிகையை தாக்கியவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி, நடிகை ரக்தாவை பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர்.
எகிப்து அது இஹ்வானுல் முஸ்லிமீன் உடைய கலீபா முற்சியின் நாடாயிற்றே.. அங்கா இந்த சம்பவம்.....?
ReplyDelete