Header Ads



முஸ்லிம்களின் அவலம் குறித்து விவாதிக்க காத்தான்குடி நகரசபை தவிசாளர் எதிர்ப்பு



காத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம வகிக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் அவசரப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தது. இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கவலைக்கிடமான சூழ்நிலைகள் தொடர்பில் அவசரத் தீர்மானங்கள் சிலவற்றை நிரைவேற்றவெனக் கோருகின்ற பிரேரனையாக இது அமைந்திருந்தது.

இந்தப் பிரேரணையை அவசரப் பிரேரணையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் SHM. அஸ்பர் உறுதியாக எதிர்த்தார்.

முஸ்லிம் சமூகத்தின் நலன்களையும் நாட்டு நலனையும் கருத்திற்கொண்டு கண்டிப்பாக இப்பிரேரணை பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் PMGGயின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி), MHA. நசீர் ஆகிய நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தி வாதாடியும், ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலரும் PMGG பிரதிநிதிகளின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட போதிலும் இறுதிவரை இப்பிரேரனையைப் பரிசீலிப்பதற்கான அனுமதியை தவிசாளர் வழங்கவில்லை. அடுத்த வாரத்திலாவது இதற்கான விஷேட கூட்டம் ஒன்றைக் கூட்டி இது பரிசீலிக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வையுருத்தப்பட்ட போதிலும்கூட அதற்கான உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்படும் எனக் கூறியதன் மூலமாக இறுதியில் இது தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் சபை கலைந்தது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை PMGG, காத்தான்குடியிலுள்ள தனது தலைமைக் காரியாலயத்தில் நடாத்தியது.

 21-03-2013 இரவு 8 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இன்றைய நகரசபைக் கூட்டத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்போது PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), சூறாசபை உறுப்பினர்களான நகரசபை உறுப்பினர்கள் அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி), MHA. நசீர், செயலாளர் MACM. முஹ்ஸின், MLM. லாபிர் ஆசிரியர் உட்பட பலர் பிரசன்னமாகி இருந்தனர்.

இன்று PMGGயினால் நகரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஷேட பிரேரணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.