மண்முனை மக்கள் அவதி (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய திணைக்களத்தினால் கிழக்கில் படுவான்கரையயும் - எழுவான்கரையையும் இணைக்கும் முகமாக மண்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரு இயந்நிர படகுகளில் ஒரு படகு (பாதை) 3 தினங்களாக இயந்நிர படகிலுள்ள ஓட்டையில் ஆற்று நீர் புகுந்துள்ள காரணத்தால் சேவையில் ஈடுபடாமல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நளாந்தம் பாதையை பயன்படுத்தும் பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் இவ் இயந்திர படகுப்பாதையை தினமும் பயன்படுத்தும் ஆசிரியர்கள்,அரச,தாதியர்கள் அரச சாற்பற்ற திணைக்களங்களின் ஊழியர்கள்,அங்காடி வியாபாரிகள், பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கும் ,இன்னல்களுக்கும் ஆளாகிவருவதாகவும் பிரயாணிகள் விசனம் தெரிவிப்பதோடு பாடசாலை மற்றும் காரியாலயங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக செயற்படும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த பாதை அடிக்கடி பழுதடைவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வொன்றை அவசரமாக பெற்றுத்தருமாறும் பிரயாணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் இப்பாதையை பயன்படுத்தும் பிரயாணிகள் கருத்து தெரிவிக்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தடவை மாத்திரம் பாதை சென்று முழு நாளாக சேவையில் ஈடுபடாமல் இருந்தாகவும் இதனால் நாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகியதாகவும் நேற்று பாதை சேவையில் ஈடுபடாமையினால் தோனியில் ஒருவருக்கும்.அவருடைய துவிச்சக்கர வண்டிக்குமாக 100 ரூபா பணம் கொடுத்து ஆற்றை கடந்ததாகவும் தற்போது சேவையில் ஈடுபடும் பாதை கூட பாதை செல்லும் நேரத்தில் பாதைக்குள் புகுந்துள்ள நீரை நீர் இரைக்கும் இயந்திரம் மூலம் இரைக்கப்படுவதாகவும் இதனை சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் ,அரசியல் வாதிகள் உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
ஒரு பாதை நீரை நீர் இரைக்கும் இயந்திரம் மூலம் இரைத்து சேவையில் ஈடுபடுவதால் மக்கள் மத்தியில் பாதையில் செல்வதற்கு ஒரு வித அச்சம் நிலவுகின்றது.
Post a Comment