அக்குறணையில் இப்படியும் நடைபெற்றது - ஏனையவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
(J.M.HAFEES)
அக்குறணைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடன் தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பல இலட்ச ரூபா மோசடியில் ஈபட்டவர் என சந்தேகத்தின் பேரில் அளவத்துகொடைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றித் தெரிய வரவதாவது,
அக்குறணை புளுகஹதென்ன என்ற இடத்தைச் சேர்ந்த எம். சாபி என்பவருக்கு கிடைத்த ஒரு ஈ-மெயில் அறிவித்தலின்படி நைஜீரியாவைச் சேர்ந் ஒருவர் இலங்கையில் 57 இலட்சம் அமேரிக்க டொலர்களை இலங்கை நாயணயத்தில் இலங்கையில் முதலீடு செய்வுள்ளதாகவும் அதற்கு மேற்படி நபரை இலங்கை முகவராக நியமித்துள்ளதாகவும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
அதற்கு குறிப்பிட்ட நபர் விருப்பம் தெரிவித்ததை அடுத்து இன்னும் பல ஈமெயில்கள் பரிமாறப்பட்டு இறுதியில் பின்வரும் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 57 இலட்சம் அமேரிக்கடொலர்களை எடுத்துக் கொண்டு ஒரு நபர் வருவதாகவும் அதனைப் பெற்று பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளும்படியும் கொண்டு வரும் நபருக்கு அமெரிக்க டொலர் 2500 ஐ (இலங்கை நாணயத்தில் மூன்று இலட்ச ரூபா) வை போக்கு வரத்துச் செலவாகக் கொடுத்து அவரை வழியனுப்பி விட்டு பெட்டியில் உள்ள பணத்தில் அத்தொகையை எடுத்துக் கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பணத்துடன் அந்நபர் கொழும்பு வந்துள்ளதாகவும் பணத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பாக சந்தேகமடைந்த நபர் கொழும்பு செந்தேக நபர் அக்குறணை புளுகஹதென்னயில் உள்ள மேற்படி நபரை நேரடியாக சந்தித்து பணத்தை கையளிக் விரும்பியதை அடுத்து அவர் அக்குறணைக்கு வரவழைக்கப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த போது திட்டமிட்படி பொலீஸார் வீட்டை முற்றுகையிட்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். அதன் போது அவர் கெமறூன் நாட்டுப்பிரஜை என்றும் அவர் விசா காலாவதியாகி உள்ள ஒருவர் என்றும் கடவுச் சீட்டு மூலம் தெரிய வந்துள்ளது.
இது போன்ற பல மோசடிகளை இந்நபர் மேற்கொண்டிருக்க முடியும் என்றும் அப்படி யாரும் ஏமாற்றப்பட்டிருந்தால் அளவத்துகொடைப் பொலீஸாருடன் தொடர்புகொள்ளும் படியும் பொலீஸார் வேண்டிக் கொண்டனர்.
விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
This is called scam. You will be duped by emails by thieves from Aftican countries. Don't ever read emails from these criminals. Just delete them.
ReplyDeleteThis is a spam played by nigerians for the past few years they will send all details and at last they will request some money to transfer the fund. If they are giving millions why they need a few dollers to do the process. Don't belive these chain mails.
ReplyDelete