Header Ads



மரதன் ஒட்டப்போட்டியில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதித்துள்ள ஹமாஸ்

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு பெண்கள் மரதன் போட்டியில் பங்கேற்க தடை விதித்ததை அடுத்து ஐ.நாவால் அங்கு ஏற்பாடு செய்திருந்த மரதன் போட்டி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

காசாவில் மூன்றாவது ஆண்டாகவும் இந்த மரதன் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் உள்நாட்டு சம்பிரதாயங்களுக்கு மதிப்பு அளித்தே போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் ஐ. நா. வின் மீட்புப் பணிகளுக்கான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், காசா நிர்வாகம் பெண்கள் போட்டியிட மறுத்த நிலையில் போட்டியை ரத்துச் செய்வதை கவலையுடன் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த முடிவுக்கு நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து ஓடுவதை எம்மால் ஏற்க முடியாது” என ஹமாஸ் அரசின் அமைச்சரவை செயலாளர் அப் தஸ்ஸலாம் சிய்யாம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். ஆனால் போட்டியை நிறுத்தும்படி நாம் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. this kind of useless action need to remove from islamic country ,if men and women mixed in office, bus ,market etc .then why in this sports ?

    ReplyDelete

Powered by Blogger.