மடையர்கள் சில தவறுகளைச் செய்கின்றார்கள், அதற்காக நாங்கள் கிளர்ந்தெழக் கூடாது
(இ. அம்மார்)
சில மடையர்கள் சில தவறுகளைச் செய்கின்றார்கள். அதற்காக நாங்கள் கிளர்ந்தெழக் கூடாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து சட்ட நடடிவக்கைகள் எடுத்தல் வேண்டும் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தின் அத்தியட்சகர் சில்வா தெரிவித்தார்.
பஹகஹதெனியப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம் பறஹகஹதெனிய தேசிய பாடசாலையில் இன்று 30-0-2013 மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் விசேட விளக்கவுரை நிகழ்த்துக் கொள்வதற்காக கலந்து கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கு இவ்வாறு இதனைத் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
வெளிநாட்டில் வாழும் மக்களை விட எம்முடைய நாட்டு மக்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்படக் கூடியவர்கள். இது ஒரு ஜனநாயக நாடு. யாரும் எந்த சமயத்தையும் பின் பற்ற முடியும். அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் தத்தமது சமயப் பண்பாடுகளை பின்பற்றுதல் அவசியமாகும். இலங்கையின் சட்டத்தில் உயர்ந்த சட்டம்தான் அரசியலமைப்புச் சட்டம். அதில் யாவரும் எந்த மதத்தைப் பின்பற்றலாம். அதனை மற்றவர்களுக்கு போதனை செய்யவும் முடியும். ஆனால் மாற்று மதத்தவர்களுக்குச் செய்யும் போது அவர்கள் மனம் புண்படாது நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காமல் செய்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினை எதிர்காலத்தில் சின்னஞ் சிறார்களின் மத்தியில் ஒற்றுமைக்கு பாரிய சவாலாக அமையும் எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொண்டு வருதல் அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனிதர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உயிரினங்களில் மனிதர்களே சிறந்தவர்களாக உள்ளனர். அவர்கள் மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ பிரிந்திருந்தாலும் அவர்களுடைய உடம்பில் ஓடுவது ஓரே இரத்தமாகும். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் சரி தமிழர்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அவர்கள் உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாகும்.
இன்று இன ஒற்றுமைக்கு மாவத்தகம நகரில் உள்ள வர்த்தக சங்கம் ஒரு எடுத்தக் காட்டாக உள்ளது. இந்தப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் ஆகிய மக்கள் பரஸ்பரம், விட்டுக் கொடுப்பு, நல்லெண்ணம்; புரிந்துணவுடன் பல்வேறு சமூக் இயக்க நடடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
This police person given good reports us and sametime this message should send BBS too.
ReplyDeleteஅதே வேலையை நாங்கள் செய்தால் மடையர் என்ரு சொல்வீர்களா அல்லது தீவிரவாதி என்று உள்ளே போடுவீர்களா
ReplyDeleteGood advise Muslims will never do like what this stupid BBS do but they have planted a poisoning seeds one day they do the harvesting in the same way by their own people's only
ReplyDeleteமுஸ்லீம் சகோதரர்கள் அங்கு நடக்கும் அநியாயங்களை உலக ஊடகங்களுக்கு புகைப்படம் வீடியோவாக தொடர்ந்து அனுப்புங்கள் மேலும் உலக மனித உரிமைக்களகத்துக்கும் ஐ. நா வும் தொடர்ந்து பதிவுகளை அனுப்புங்கள்.
ReplyDelete''(இறைக் கட்டளைகளை) நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தைக் கொடுத்து (அல்லாஹ்வுக்குப்) பணிகிறவர்களே வெற்றியாளர்கள்.' (திருக்குர்ஆன் 5:55)
''நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டத்தார் உங்களில் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்' (திருக்குர்ஆன் 3:104
''அல்லாஹ்வின் கூட்டத்தினரே பெரும் வெற்றியாளர்கள்'.
(திருக்குர்ஆன் 5:36)
கீழை. முகம்மது