Header Ads



ஆஸாத் சாலியின் அலுவலகத்தை பொலிஸார் முற்றுகை


கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஆஸாத் சாலியின் அலுவலகத்தை சற்றுநேரத்திற்கு முன்னர் பொலிஸார் முற்றுகையிட முயன்றுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சம்பவ இடத்திற்கருகில் நின்று மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி மூலமாக உறுதிப்படுத்தினார்.

2 ஜீப்களில் ஆஸாத் சாலியின் அலுவலகத்திற்கு விரைந்துள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள் அங்கு அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள ஆஸாத் சாலியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சில ஆவனங்களை எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் படும் அவலங்களை ஆதாரங்களுடன் அறியப்படுத்துவதில் ஆஸாத் சாலி முன்நின்று செயற்பாட்டார். இந்நிலையில் அரசாங்கம் ஜெனீவாவில் தோல்லியடைந்துள்ளது. எனினும் பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

இதேவேளை இவ்விடயங்கள் தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் ஆஸாத் சாலியுடன் தொடர்புகொண்டு மேலதிக விடயங்களை அறியமுயன்றபோது அவரது கையடக்க தொலைபேசி ஓப் செய்யப்பட்டிருந்தது.

19 comments:

  1. It could be not Police, but Balu sena fake police.

    ReplyDelete
  2. அஞ்சுவதும் அடி பணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.........
    வேற எவனுக்கும் இல்ல..

    ReplyDelete
  3. Mr. Ashad, don't worry Allah will help you.

    ReplyDelete
  4. The next target will be the head office of SLTJ

    ReplyDelete
  5. sir thairiyama sollunga "muthalla 6 muslim nadugal waakkalithullathu..... " ithu yarukku therium

    ReplyDelete
  6. allah will help us we a behind you brothers dont fear you really Jihad.

    ReplyDelete
  7. muslimkalukkaha kural koduththe 1 veeran asaath saali.
    Avanaiyum inthe muslim peyar thaankiya arasiyalvaathikal koddi koduththu viddarkala? Illai.
    Pps'um gothapayada koolip padaiyum searnthu thooka poai viddatha?
    Yaa allah muslimkalukkahavum unmaikkahavum poaradum thalaivarkalai kaappattuvayaha.! Aameen.!

    ReplyDelete
  8. என்னடா வழமைபோல Comments பண்ணிக்கொண்டிருந்த யாரையும் காணல்ல அவ்வளவுதானா? ஆஸாத்சாலிதான் எங்கட அடுத்த தலைவர் முஸ்லிம்களுக்கு உண்மையாகக்குரல் கொடுக்கும் எமது தலைவர் என்று அவரை வாழ்த்தோ வாழ்த்தெண்டு வாழ்த்திட்டு இப்ப இரண்டு வாகனங்களில் பொலிஸ் ஆசாத்சாலியின் அலுவலகம் சென்றனர், வீட்டுக்குச்சென்றனர் என்ற செய்தி கேட்டதும் மனதுக்கு கொஞ்சம் பக்கென்றமாதிரி இருக்கின்றதா? ஆம் யாரும் பயப்படவேண்டாம் இறைவன் காப்பாற்றவேண்டும் நாளை எமது சகோதரன் ஆசாத் சாலிக்கு கண்டிப்பாக இந்த நாட்டின் அரசாங்கத்தால் பல இன்னல்களும் தொந்தரவுகளும் வர வாய்ப்புண்டு அவைகள் அனைத்துக்கும் முகம்கொடுக்க நாம் சகோரர ஆசாத்சாலிக்கு பலவகையிலும் ஒத்துழப்பாக இருக்கவேண்டும் அவர் இலங்கைவாழ் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்குத்தான் குரல்கொடுத்தார் நாளையும் குரல் கொடுக்கவிருந்தார் இதுதான் அவர் செயத குற்றம், போதுமே இது நமது அரசாங்க குடும்பத்துக்கு, ஏற்கனவே சரத்பொன்சேகாவும், சிரானி பண்டாரனாயக்கவும் என்ன குற்றம் செய்தார்கள் அரசுக்கு அரசு குடும்பத்துக்கு எதிராக நடந்ததுதான் குற்றம். ஆகவே யாரும் பயப்படவேண்டாம் சளைத்துவிடவேண்டாம் இந்த அடாவடித்தங்களுக்கு ஒரு முடிவுகட்டவே வேண்டும் ஆகவே யாவரும் ஒன்று சேர்வோம் நமது எதிர்ப்பினைத்தெரிவிப்போம், சிந்தனையுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கும் ஒற்றுமையுடன் நல்லவைகளையெடுத்துச்சொல்லி வெற்றிபெற முயற்சிப்போம்.

    முக்கியமாக நமக்காக குரல்கொடுத்வர்களுகு நாம் எப்போதும் குரல்கொடுக்க கைகொடுக்க மறந்துவிடக்கூடாது,பின்வாங்கக்கூடாது இதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் உறவினருக்கு சேர்ந்ததுதான் விரும்பினால் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ஒன்று சேருவோம்.

    ReplyDelete
  9. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஒரே ஒரு ஜீவன். அதையும் நசுக்க முற்பட்டு விட்டார்கள். இனி முஸ்லிம்கலின் நிலைமை அதோ கதி தான். அல்லாஹ் தான் நமக்குத் துணை.

    ReplyDelete
  10. a real leader is being made.

    ReplyDelete
  11. இது போன்ற பலவீனமான கருத்துக்கள் எழுத கூடாது சகோதரர் Ranees போன்ற EIMAN வலுவான நம்பிக்கை வைத்து எழுது.
    அல்லாஹ் நம் சகோதரர் அசத் சாலி (ஹீரோவை) வெற்றி செய்வான் (Aameen)

    ReplyDelete
  12. We are with you Brother " All My brothers and sisters in Islam please ask dua for this good man and to all Muslims in the world"

    "The dua of a Muslim for his brother (in Islam) in his absence is readily accepted, an angel is appointed to his side, whenever he makes a beneficial dua for his brother the appointed angel says "aameen and may you also be blessed with the same".
    [Sahih Muslim]

    ReplyDelete
  13. He's the only leader who talks for muslim. Now he's in trouble. Please ask dua for our leader. Allah will help him

    ReplyDelete
  14. யா அல்லாஹ் இந்த ஜும்மாவின் பரகத்தினால் இலங்கை முஸ்லிம்களை பலப்படுத்துவாயாக.,இலங்கை முஸ்லிம்களே! அரகான் நினழ்வுகள்(பர்மா) மூலம் படிப்பினை பெற்று அல்லாஹ் சொல்வது போன்று தயாராக இருப்போம் என்றும் யா அல்லாஹ் அதற்குறிய சக்தியை இலங்கை முஸ்லிம்களுக்கு தந்தருள்வாயாக.

    ReplyDelete
  15. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஒரே ஒரு ஜீவன்ஆஸாத்சாலிதான் அல்லாஹ் துணை

    ReplyDelete
  16. Mr Sally Don't worry they can't do nothing for you because u r telling the truth for the Muslims there fore all might Allah help u Ameen.

    ReplyDelete
  17. நிச்சயமாக எல்லாம் வல்ல அள்ளாஹ் எங்கள் ”அஞ்சா நெஞ்சன்” அஷாத் சாலி அவர்களுக்கு பாதுகாப்பையும், துணிச்சலையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும். நிச்சயமாக அள்ளாஹ் எம்முடனே இருக்கின்றான். யாரெல்லாம் இந்த அ(சு)ர(ச) குடும்மத்தின் இயக்கத்தில் ஆடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வல்ல அள்ளாஹ்வின் தண்டனை நிச்சயம். யா அள்ளாஹ் ”அஞ்சா நெஞ்சன்” அஷாத் சாலி அவர்களையும் அவரைப் போல் எமக்காக பாடுபடும் அனைவரையும் பாதுகாப்பாயாக ஆமீன்.

    ReplyDelete
  18. அவசரப் படாதீர்கள் சகோதரர்களே இவை எல்லாம் கலப்பற்ற அரசியல். சோடாப் போத்தல் வேகத்தில், நம்பி சிந்திக்கும் திறனை இழக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். ஒன்று மட்டும் உங்களுக்கு சொல்லலாம். "இறந்த காலம் தான் அனுபவம்."
    சிந்திக்கும் மக்களுக்குத் தான் இறைவன் அத்தாட்சிகளை வைத்துள்ளான். அவசரப் புத்தி உள்ளவர்களுக்கோ அல்லது கண்டதெல்லாம் நம்புபவர்களுக்கோ அல்ல. இதுவெல்லாம் நாடகம். நம்பி சமூகத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வர வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.