சவூதி அரேபியாவில் மியன்மார் முஸ்லிம்கள் குறித்து ஆராயும் அவசர கூட்டம்
(Tn) மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக ஓ.ஐ.சியின் தலைவர் எக்மலிதின் இஹ்சானொக்லு அறிவித்துள்ளார்.
மியன்மாரில் கடந்த 10 தினங்களாக நீடிக்கும் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையிலான மதக்கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதென அந்நாட்டு அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. தவிர 1,300க்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் ஓ.ஐ.சி. வெளியிட்ட அறிவிப்பில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக தேவைப்படும் அனைத்து நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு நடவடிக்கை, இனவாத செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மியன்மார் அரசுக்கு ஓ.ஐ.சி. அழுத்தம் கொடுத்துள்ளது.
இதனிடையே இந்த வன்முறைகளுக்கு அரசு மட்டத்தில் தொடர்பிருப்பதாக ஐ.நாவின் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகவலை மியன்மார் அரசு முற்றாக மறுத்துள்ளது. மத்திய மியன்மாரில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான மதக் கலவரத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ரகினெ மாநிலத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு 110,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.
அரகானில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடந்த வருடம் 180 இற்கு மேல் தான் கொள்ளப் பட்டனர். அதாவது 30,000 பேருக்கு அதிகம். 180 என்று வருவது மனதைப் புண்பட வைக்கிறது. கடலில் தத்தளித்து இறந்தவர்களே ஆயிரமாயிரம். இது போன்ற விடயங்களில் jaffna muslim குறிப்பு விடுவது நன்று.
ReplyDeleteDemolish The Burma, Make A Another Islamic State There.
ReplyDelete