Header Ads



மூளையை சுறுக்கும் டயட்..!



வாயைக் கட்டி வயித்தைக் கட்டியாவது ஒல்லியாகிவிட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதுமுள்ள ‘வெயிட்’ பார்ட்டிகளின் லட்சியம். ஆனால்,  அப்படி டயட்டில் இருக்கும்போது நமது உடல் மட்டும் மெலிவதில்லை... மூளையும் தன்னைத் தானே தின்று சுருங்கிப் போகிறது என்பதைக்  கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

நியூயார்க் நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நவீன கருவிகள் மூலம் இதை நிரூபித்துள்ளனர்.  உண்மையில் உணவுக் கட்டுப்பாடு என்பதன் அடிப்படையே, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்காமல் பட்டினி போட்டு நம் உடலே உடலைத்  தின்று உயிர்வாழச் செய்வது தான். அப்படி பட்டினி கிடக்கும்போது உபரிக் கொழுப்பை எரித்து, அதிலிருந்து தனக்குத் தேவையான சக்தியை எடுத்துக்  கொள்கிறது நம் உடல்.

‘‘இத்தனை நாட்களாக ‘இது பாஸிட்டிவ்தானே’ என்று முடிவெடுத்துத்தான் நாம் டயட்டைப் போற்றி வந்தோம். ஆனால், நம் உடலே உடலைத்  தின்னும் அந்தத் தருணத்தில் நம் மூளையில் உள்ள செல்களும் ஒன்றையொன்று தின்னத் தலைப்படுகின்றன. அப்படிப்பட்ட கட்டம் வரும்போது நம்  மூளை, ‘உடனடியாக எதையாவது சாப்பிடு’ என்று நமக்குக் கட்டளையிடுகிறது. அதன் விளைவே அகோரப் பசி. 

இப்படி பசி எடுத்தால் நாம் உணவு எடுத்துக் கொள்வோம். மூளை செல்களுக்கு ஆபத்தில்லை. மூளை செல்களை பாதுகாக்க இயற்கையே செய்து  வைத்திருக்கும் ஏற்பாடு இது. ஆனால், டயட்டில் இருப்பவர்கள் அந்த அகோரப்பசியை மதிப்பதில்லை. உடல் மெலிய வேண்டும் என்ற ஒரே  குறிக்கோளோடு அவர்கள் தம் உடலை வருத்திக் கொள்வதால், மூளையின் செல்களை மூளையே தின்று உயிர் வாழ்கிறது’’ என்கிறார் அந்த  ஆராய்ச்சிக் குழுவின் தலைவரும் அமெரிக்கா வாழ் இந்தியருமான ரஜத் சிங்.

எலிகளை வைத்து இந்தச் சோதனையைச் செய்தபோது, ஒரு வகை தடுப்பு மருந்தையும் கொடுத்து சோதித்தார்கள். இந்த மருந்தைச் சாப்பிட்ட  எலிகளின் மூளை செல்கள், அகோரப் பசியிலும் மற்ற செல்களை சாப்பிடத் தலைப்படவில்லை. அதனால் அந்த மருந்து கொடுக்கப்பட்ட எலி,  மூளையில் செல்களை இழக்காமலேயே உடல் மெலிந்து ஸ்லிம் ஆகிவிட்டது. அந்த மருந்து மனிதர்களுக்கும் ஒர்க் அவுட் ஆகும் என்று நம்பிக்கை  தெரிவிக்கிறது அந்த ஆராய்ச்சிக் குழு. 

No comments

Powered by Blogger.