வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றும் தார்மீக பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது - றிசாத்
வன்னி மாவட்டத்துக்கு வெளி மாவட்டத்தில் இருந்து கடமையாற்ற வருகின்ற பிற மாவட்ட அதிகாரிகளுக்கு பிழையான தகவல்களை இங்கிருக்கின்ற சில அதிகாரிகள் வழங்கிவருவதினால், இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புலிகள் இல்லாத நிலையில் அதனை வளர்ப்பதற்கு அன்று முதல் உதவி செய்துவருகின்ற பலர் இன்று இவ்வாறான நிலையினை மேற்கொள்கின்றனர் என்று கூறினார்.
மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் 185 கன மீற்றர் கொள்வனவினை கொண்ட குடி நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது –
இன்று இந்த பிரதேசத்திற்கான சுத்தமான குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வருகைத்ந்துள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பாராட்ட வேண்டும். ஏனெினல் இனவாத சிந்தனைகளை கடந்து மனிநேயத்துடன் அவரது பணிகள் இடம் பெறுவதையிட்டு. வன்னி மாவட்ட மக்களது வாழ்வாதார திட்டங்களாக இருந்தலென்ன,உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் என்றாலென்ன எவற்றை நாங்கள சென்று கேட்டாலும்அதனை எவ்வித சளிப்புத் தன்மையுமில்லாமல் அவற்றை உடனடியாக வழங்கும் மனித நேயம் கொண்டவர் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்,அதே வேளை வன்னி மாவட்டத்தின் புதிய வரலாறு எழுதப்படுகின்ற போது அதில் ஜனாதிபதியினதும்,அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களினதும் பெயர்கள் நிச்சயமாக பொறிக்கப்பட வேண்டும்.யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி திட்டங்களிலும்,இங்குள்ள மக்களை மீள்குடியேற்றுவதிலும் பெரும் பங்கினை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆற்றியுள்ளார்.
இன்று சிலர் கடந்த 30 வருட காலம் தங்களுக்கு புலிகள் இழைத்த அநியாயத்தை மறந்றுவிட்டனர். அன்று புலிகளின் பின்னால் இருந்தவர்கள் இன்று வந்து இனவாதத்தை கக்குகின்றனர்.புலிகள் தான் அன்று இனவாதத்தை தோற்றுவித்து தமிழர்களையும், முஸ்லிம்களையும்,சிங்களவர்களையும் பிளவுபடுத்தியதுடன் மட்டுமல்லாமல்,தமது தாயக பூமியில் முஸ்லிம்களையும்,சிங்களவர்களையும் வாழுவதற்கு இருந்த உரிமைகளைக் கூட பறித்தொடுத்த அநியாயத்தை செய்தனர்.அதற்கு இன்றும் சில அதிகாரிகளும்,ஊடகங்களும் துணைபோகின்றனர்.இன்று 22 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேற வருகின்ற முஸ்லிம்களை,ஏதோ புதியவர்கள் மீள்குடியேற்றப்படுகின்றார்கள் என்று பிழையான அறிக்கைகளை விடுத்துவருவதை காணமுடிகின்றது.
இதனது பிராதான நோக்கம் இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கும்,அல்லது என்னை ஏதாவது ஒரு வகையில் ஒழித்துக்கட்டுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.அதற்காக வேண்டி என்னை தமிழ் மக்களின் விரோதிகாளக காட்டும் அளவுக்கு ஊடக மாபியாவும் இடம் பெறுகின்றது.கடந்த 11 வருடகாலமாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து வருகின்றேன்.எனது வாழ் நாளில் ஒரு போதும் நான் இனவாத சிந்தணையினை கொண்டதில்லை.அவ்வாறு குறுகிய நோக்கத்துடன் ஒரு போதும் செயற்பட்டதில்லை.தமிழ் மக்கள் இருந்தால் என்ன ஏனைய சமூகமாக இருந்தால் என்ன எல்லோரும் தேவையுள்ள மனிதர்கள்,இறைவனின் படைப்புக்கள் என்பதை நான் நன்கு புரிந்தவன்.இந்த நாட்டில் சகல சமூகங்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புபவன்.
இந்த வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.அந்த வகையில் மீள்குடியேறும் மக்களுக்கான தனியான வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்யமுடியாது போனால் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சர்வதேசத்திற்கு முன்னுதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் எமது நாட்டிற்கு புலம் பெயர் அமைப்புக்குள் பிழையான அர்தத்தை ஏற்படுத்திக் காட்டுவர்கள்.இதற்கு ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மதங்கள் அனைத்தும்,இன ஒற்றுமையினையும்,அகிம்சையினையும் வலியுறுத்தி நிற்கின்றது.ஆனால் சிலர் பிரிவினை வாதத்தின் மூலம் இன அழிவுகளுக்கு துாபமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்த செயல்கள் எமது மாவட்டத்தினதும்,மக்களினதும் மேம்பாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைத்தவனாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ள ஒன்றுபடுவோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.இந்த நிகழ்வில் நீர் வழங்கல்,வடிகாலமைப்பு துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன,வடமகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
meendum resettlement ministry risad ministerkku valankappaddal pirachinai viraivil theerum
ReplyDelete