முஸ்லிம்களுக்கு காக்கிச்சட்டை போடாத பொலிஸ்காரர்கள் அச்சுறுத்தல் - உதுமாலெப்பை
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
இந்த நாட்டில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஒதுக்கி அடக்கி ஆள முடியாது. அவ்வாறு நினைக்கும் எந்தவொரு இனவாத சக்தியும் நிலைத்திருக்க முடியாது என்பதை பொதுபல சேனா போன்ற பேரினவாத சக்திகள் கடந்தகால வரலாறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கடும் போக்குடன் உண்மைக்குப் புறம்பாகவும், யதார்த்தத்துக்கு மாறாகவும் செயற்பட்டு முஸ்லிம்களின் மனதை புன்படுத்திவரும் பொதுபல சேனாவுக்கு இறைவனின் தண்டனை மிகவிரைவில் கிடைக்கும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சறுத்தல், அறிக்கைகள் தொடர்பாக அவர் இன்று(26) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டள்ளதாவது.
மதத்தின் பேரால் இன்னொரு மதத்தையும், கலாசாரத்தையும், அவர்களின் பாரம்பரியத்தையும் அழிக்க முற்படுவது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமானவையாக அமையாது. மட்டுமல்லாது அது மனித நாகரீகமாகவும் இருக்காது. கடந்த முப்பது வருடகால கொடுர யுத்தத்தின் பின்னர் இழக்கக் கூடாதவைகளை எல்லாம் இழந்து இன்று அமைதியான முறையில் அபிவிருத்தியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் எமது நாட்டில் மதவாதத்தைத் தூண்டி அமைதிக்கு பங்கம் விளைவிக்க ஏகாதிபதித்தியவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுபல சேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் பெரும் கவலையையும், அச்ச நிலையையும் தோற்றுவித்துள்ளன.
காலா காலமாக இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுடனும் விசுவாசமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகம் எந்தவொரு காலகட்டத்திலும், சந்தர்பத்திலேனும் காட்டிக் கொடுக்கவோ அல்லது பிரிவினையையோ ஏற்படுத்த முயற்சித்ததில்லை. இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடிய காலகட்டத்திலும் கூட தமிழ், சிங்கள சமூகத்தினரிடையே முஸ்லிம்கள் மிக நிதானமாவும், அன்பாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களிலும், வயல்களிலும் படுகொலை செய்யப்பட்ட போதும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் குறுகிய நேரத்தினுள் இனச் சுத்திகரிப்புச் செய்யும் வகையில் வெளியேற்றப்பட்ட போதும் முஸ்லிம்கள் பொறுமையாகவே இருந்தனர். தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் அப்படியான சூழ்நிலைகளிலும் கூட மிகவும் நிதானமாவே செயற்பட்டனர். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத்தான் தெரியும், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை பிரிந்து வாழ முடியாது என்பது. இன்று மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் மதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்ட பொதுபல சேனாவுடன் சில ஆழும் கட்சி அரசியல் சக்திகளும் கைகோர்த்து உதவி வருவது மிகவும் கவலை அளிக்கும் செயற்பாடாகவே உள்ளது.
இனத் துவேசங்களின் பேரால் அரசியல் சாசனத்திற்கு சவால் விட்டுக் கொண்டு காக்கிச்சட்டை போடாத பொலிஸ்காரர்கள் என்று சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டும் செல்ல முயலும் பொதுபல சேனா முஸ்லிம்களின் கலை கலாசார பண்பாட்டு மார்க்க விடையங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று இன முறன்பாட்டை தோற்றுவிக்க எடுத்துவரும் செயற்பாட்டிற்கு அனேகமான மனித நேயமுள்ள சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை கூறிவருவதுடன் முஸ்லிம் மக்களின் பொறுமையையும், ஒற்றுமையும் பாராட்டிப் பேசி வருகின்ற அதேவேளை சிறு கிராமப்புரங்கள் மற்றும் கடும் போக்குடனான இனவாதிகள் மத்தியில் இவர்களின் பிரச்சாரம் தாக்கம் செலுத்தி உள்ளது. இதனால் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது மட்டுமல்லாது மனதை புன்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சமூகத்தைப் போன்றே ஏனைய சமூகங்களும் உணவு உண்ண வேண்டும், ஆடை அணிய வேண்டும். மதஸ்தலங்களை அமைக்க வேண்டும். குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவதை அறிவுள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்குப் பிடித்த ஹலால் உணவை நாங்கள் தேடிக் கொள்வோம். எங்களுக்கு நீங்கள் ஆடைக்குறைப்புச் செய்து மார்க்கம் சொல்லித்தர வேண்டிய அவசியமும் தேவையும் கிடையாது.
இன்று பொதுபல சேனா இந்த நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றனர். இதற்காக முஸ்லிம்கள் மத்தியில் எவ்வளவு பாரதூரமான செயற்பாடுகளை செய்து உணர்ச்சி வசப்படுத்த முடியுமோ அவைகளையெல்லாம் பணம் கொடுத்து சில காடையர் கூட்டத்தை வைத்துக் கொண்டு செயற்படுகின்றது. அண்மையில் ஊடகங்கள் வாயிலாக கூறப்பட்ட மன்னம்பிட்டியவில் உப தபாலதிபரின் பர்தா பிடித்து இழுக்கபட்ட விடயம், கண்டியில் மௌலவி ஒருவரின் தொப்பி கழற்றப்பட்ட விடயம், புறக்கோட்டையில் பாடசாலை மாணவி பர்தாவுக்காக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விடயங்கள் எல்லாம் உண்மையாக இருப்பின் அவ்வாறான ஈனச்செயல்களை நாகரீகமுள்ள எந்த மனித சமூதாயத்தினாலும் அங்கிகரிக்க முடியாது.
ஆக இன்று முஸ்லிம் சமூகத்திற்கு உலகம் முழுவதிலும் அச்சுறுத்தலும், திட்டமிட்ட செயற்பாடுகளும் இடம் பெற்றுவருகின்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முறன்பாடு ஒரு சிறு குழுவினாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை ஒரு சாதாரணவிடயமாகக் கருதக் முடியாது. இதற்காக முஸ்லிம் சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகள், ஜம்மியத்துல் உலமா மற்றும் சிவில் சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலத்தினுள் மாற்றப்பட்டிருக்கின்றோம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஊடக அறிக்கை விடும் காலம் கடந்துவிட்டது களத்தில் இறங்கி பொதுமக்களாகிய எங்களுக்குப்பின்னால் வாருங்கள்
ReplyDeleteஇது இப்பதான் உங்களுக்கு புரியுதா, இல்ல இதிலும் ஒரு அரசியல் இருக்கா?
ReplyDeleteஇறைவன் இவர்களை போன்றவர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பானாக!
என்னா சார் இப்படி சப்ப கட்டு கட்டுறீங்களே?
ReplyDeleteசார் உங்கள் தலை(வர்) சும்மா சோ காட்டிக்கு இருக்கும் போது வால் ஏன் சும்மா ஆடுது ?
உமது காலம் கடந்த அறிக்கையை பார்த்தால் அடுத்த எசல பெரஹராவை உங்கள் தலைவர் அக்கரைப்பற்றிலிருந்து அட்டாளைச்சேனை வரை நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
முதலில் உங்கள் தலைவருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் உப்புப் போட்டு சாப்பிட சொல்லுங்கோ! சில நேரம் ரோசம் வராவிட்டாலும் ஞானம் வந்தாலும் வரும் .
அறிக்கைகளால் எந்த பிரயோசனமும் கிடையாது...! வேண்டுமானால் மக்களை ஏமாற்றவே உதவும்.
ReplyDeleteநீங்கள் ராஜபக்ச அன் கம்பனியின் மிகவும் துவேசமான குணத்தை புரிந்து கொள்ள வேண்டும்...! முடிந்தால் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயற்சி செய்யவும்.
தேசிய அரசாங்கத்துல சேர்ந்துக்கு ஒரு பதவிய எடுக்கிறதுக்கு அண்ணரோட சோந்து ஒரு படம் எடுக்கிறாப்போல கெடக்கு!
ReplyDeleteஹஸனாரும் அண்டக்கி வாயத் திறந்திட்டாருள்ளே . அப்ப உதுமாரும் என்னத்தாலும் தண்ட பங்குக்கு சொல்லத்தான வேனும். என்னத்தாலும் சொல்லுங்க ஆனா எல்லாரும் வஸ்ஸ விட்டுட்டியல்.
ReplyDeleteஞானி என்பதன் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் நீங்கள் தன் பெயருடன் அதை அடைமொழியாக சேர்த்திருக்க மாட்டார்!
ReplyDeleteஅப்பு ஞானி நீங்கள் தப்பு ஞானி!