Header Ads



முஸ்லிம்களை குடியமர்த்த தமிழர்கள் எதிர்ப்பு


முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் பொருட்டு அந்தப்பகுதியில் நில அளவை செய்ய முயன்ற அதிகாரிகள் அங்குள்ள தமிழ் மக்கள் நடத்திய எதிர்ப்பை அடுத்துப் பின்வாங்கிச் சென்றனர் எனத் தெரிக்கப்படுகிறது. 

முள்ளியவளைப் பகுதியிலுள்ள 540 ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து அந்தப் பகுதியில் ஆயிரத்து 445 முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. 

முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள காணியை நில அளவைத் திணைக்களத்தைக் கொண்டு அளவீடு செய்வதற்கான நடவடிக்கையை வனப் பரிபாலனத் திணைக்களம் எடுத்திருந்தது. 

இதற்கமைய குறித்த பகுதியை நில அளவை செய்வதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், நில அளவையாளர்கள் சென்றுள்ளனர். இதனை அறிந்து அங்கு திரண்ட 80 தமிழ்க் குடும்பங்கள் எங்களுக்குக் காணியை வழங்கிய பின்னரே முஸ்லிம்களுக்குக் காணியை வழங்கலாம் என்று விடாப்பிடியாக இருந்தனர். இதனால் நில அளவை செய்வதற்கு அங்கு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர். 

No comments

Powered by Blogger.