பங்களாதேஷ் ஜாமாத்தே இஸ்லாமி அரசியல் கட்சியை தடைசெய்ய உயர்நீதிமன்றத்தில் மனு
(பங்களாதேஷிலிருந்து எம்.எச். முஹம்மத்)
பயங்கரவாதத்தை தூண்டுதல், அரசியல் யாப்பின் பிரகாரம் நாட்டின் இறைமை மக்களுக்குரியதே என்ற கொள்கையை ஏற்க்க மறுத்தல் போன்ற பல உள்நாட்டு சட்ட சரத்துக்களை மேற்கோள் காட்டி ஜமாஆத்தினை தடைசெய்யக்கோரி பங்களாதேஷ் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடையுத்தரவிற்கான காரணங்களில் ஒன்றாக, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யுத்த குற்றங்களுக்காக ஜமாஆத்தின் சிரேஸ்ட தலைவர் உட்பட்டுள்ளமையும் முறையிட்டு மனுவில் உயர்நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டபட்டுள்ளது. இது தவிர சுதந்திர பங்களதேஷில் இயங்கும் ஒரு அரசியல் கட்சியானது பாக்கிஸ்தான்,இந்தியா,இந்தோநேசியா போன்ற நாடுகளுடன் தொடர்புடையதாக செயற்பட முடியாததெனவும். மேலும் மேற்சொன்ன நாடுகள் அனைத்திலும் பயங்கரவாத பின்னனியுடன் தொடர்புபட்ட இயக்கமாகவும் ஜாமாத்தே இஸ்லாமிய அமைப்பு மனுதார்களாள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment