சிங்கள மக்களை திட்டித்தீர்த்த பொதுபல சேனா
(இ. அம்மார்)
பெபிலியான பெஸன் பக் மீது தாக்குதல் பொது பல சேனாவுக்கு எந்த சம்மந்தமுமில்லை. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொலபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டம் குருநாகல் மாவட்டத்தில் பன்னல நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இன்று 3.00 மணி அளவில் திட்டமிட்டபடி எந்த தலையீடுமின்றி நடைபெற்றுள்ளது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்த பேசுகையில்,
பொது பல சேனா அமைப்பு இந்த நாட்டில் எந்தவிதமான குற்றச் செயல்களையும் செய்ய வில்லை. பௌத்த சமயத்தவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்கின்றோம். எங்கள் பயணத்தின் மீது கொண்ட பொறாமை ,காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எங்கள் மீது பலியைப் போடுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதி முயற்சியாகும். எவராக இருந்தாலும் சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெஸன் பக் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தொவித்ததுடன் வழக்கம் போன்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தினை அவர் மேலும் தெரிவித்தார்
இந்தக் கூட்டத்தின் முக்கிய சாரம்சமாக பன்னல பிரதேச சபை இந்தக் கூட்டம் நடத்துவதற்கு பெரும் இடையூறு விளைவித்ததாகவும் சுரொட்டி மற்றும் பெனர்களை போடுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் நகரிலுள்ள சிங்கள வர்த்தகர்களில் ஓரிரு வர்த்தகர்களைத் தவிர ஏனையவர்கள் ஆதரவளிக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்காக பாரிய பிரச்சார நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரகாலமாக ஈடுபட்டனர். நாரம்மல உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் கட்டவுட் போன்றவைகளும் . சுவரொட்டிகளும் மற்றும் இறுதி நாட்களில் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்திருந்தனர்.
இன்று பன்னல நகர் உள்ள அனைத்து கடைகளும் பகல் 12.00 மணியுடன் மூடப்பட்டு விட்டது. நகர் எந்தவிதமான சன நடமாட்டமின்றி வெறி சோடிக் காணப்பட்டது. கூடுதலான பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை தோன்றியது. பொலிஸார் கடைகளை மீளத் திருக்குமாறு வற்புறுத்தியதனால் சில சிங்கள வர்த்தகர்களுடைய கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. முஸ்லிம்கள் எவரும் கடைகளைத் திறக்க வில்லை.
இந்தக் கூட்டத்திற்கு சுமார் 1000 உபட்ட அளவிலான தொகையினரே கலந்து கொண்டனர். இதில் கூடுலாக தொலை தூர இடங்களில் இருந்து வருகை தந்தவர்களே கலந்து கொண்டனர்.
எனினும் இந்தக் கூட்டம் வழக்கம் போன்று முஸ்லிம்களின் மனதைப் புண் படுத்தும் விடயங்கள் கதைக்கப்பட்டாலும் குறிப்பாக பெரும்பான்மையின சிங்கள மக்களைத் திட்டித் தீர்த்கும் கூட்டமாகக் காணப்பட்டது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
முசாவாடா வெரமனி சிக்கா பதம் சமாதியானி (பொய் சொல்வதிலிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்), இது பௌத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்சசீல கொள்கையின் நான்காவது தத்துவமாகும்.
ReplyDeleteஇவர்களை போன்றவர்கள்தான் பஞ்சசீலக் கொள்கையை புறக்கணிப்பது....!!!
ReplyDeleteஎந்த தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டுமென்று பஞ்சசீலக் கொள்கை சொல்கின்றதோ..அதனையும் இழிவு படுத்துபவர்கள் இவர்கள்
“ஜயங் வேறங் பசவதி-துக்கங் சேதி பறாஜினோ
உபசன்னோ சுகங் சேதி- ஹித்வா ஜய பறாஜயங்”
“வெற்றியடைபவர் தோல்வியடைவோரின் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்துகிறார். தோல்வியடைபவர் துக்கத்துடன் வாழ்கின்றார். நடுநிலையாக செயற்படும் சாந்த குணமுடையவர் வெற்றி தோல்வியில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வார்”
Bodu Bala Sena வில் இருக்கும் எந்த பிக்குகளும் புத்த மதத்தை படித்தவர்களாக தெரியவில்ல. நிச்சயமாக ஒரு காடையர் கூட்டம் அப்படியே பிக்குகள் என்று மாறு வேடம் போட்டுகொண்டு அரசியல் இலாபம் ஈட்டுவதற்காக சில அரசியல்வாதிகளாலும் சில வியாபாரிகளாலும் நியமிக்கப்பட்ட ஒரு கூட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களை சரியான விசாரணைக்கு உட்படுத்தினால் இவர்கள் யார் என்பது தெரிய வரும்.
ReplyDeleteTHIS IS HOW THEY ARE follwing "SURA MERE MAJJAPAMA DATTANI SIQQAPADAN SAMADIYAMI"
ReplyDeleteBodhu Bala Sena leader Gnanasara is a drunken goon and a disgrace to the Sasana: we challenge him to prove otherwise
(Lanka-e-News-31.March.2013,5.00PM) Galagoda atthe Gnanasara Thero , the monk who is the leader of Bodhu Bala Sena and pretends that his Sena is prepared to sacrifice their lives for the country and operated by Gotabaya Rajapakse , who has also earned a notoriety for ruthless unlawful killings of civilians , has truly no connections with the Sambuddha Sasana , and is a drunkard out and out according to reports with demonstrable proof reaching Lanka e news.
This Galgoda Thero the monk who is so vociferous about saving the country was a hit and run vehicle ( 6 Sri 5444) culprit on 14th April 2000, that is, this inauspicious accident occurred on the auspicious Sinhala New year day at about 2.00 a.m. when priests must be in their temples and performing religious duties and devotions . On the contrary this scoundrel of a monk was excessively drunk and the vehicle in which he traveled did not have a valid license at the time of the accident when he knocked a three wheeler at Grandpass whereby its driver was seriously injured. The victim of the accident was Ravindra Kumar.
When the police gave chase and apprehended the so called champion of the Buddhist cause and who is now parading as a great savior of the country , he was so drunk that he could not stand erect . When the police did a breathalyzer test it was found that only by his robe he was a so called monk of the highest caliber , but inside he was a drunk of the worst caliber and a scoundrel betraying Lord Buddha and all what the latter stood for so steadfastly. In other words this is a monk who had come forward to save the Buddha sasana, without knowing how to respect the Saffron robe let alone Lord Buddha .
Later the Grandpass police had filed a case No. 6315/2000 based on 9 charges against Galgoda atthe Gnanasara Thero residing at 615 , Rajagiriya through the traffic court , Colombo 12. Among the charges filed were driving under the influence of liquor without a license and causing injuries to person ; and obstructing performance of official police duties.
On the 20th of September 2000, the accused Galgoda the drunk monk had accepted all the charges and was fined Rs. 10000/-.
We challenge this Bodhu Bala Sena leader , Galgodaatthe monk to disprove these facts if he can, and confirm he is not a drunk and a goon but a true monk and a boon for the sasana.
The business establishment that was attacked by Bodhu Bala sena terrorists yesterday at the instigation of IRC monks like Galgoda Thero only went to demonstrate that they are not only villainous to the country and community but even to the noble Buddha sasana.