Header Ads



வேக வைக்காமல் தண்ணீரில் ஊற வைத்தாலே சாதமாகும் புதிய ரக அரிசி


இந்தியா  - அசாம் மாநிலம் கட்டாக்கில் மத்திய நெல் பரிசோதனை ஆராய்ச்சி கூடம் உள்ளது. இங்குள்ள விஞ்ஞானிகள் அகோனி, பெகாலி, நல்வோரா ஆகிய 3 புதிய நெல் ரகத்தை கண்டு பிடித்துள்ளனர். இதில் நல்வோரா என்ற ரக நெல்லில் கிடைக்கும் அரிசினை வேக வைக்க வேண்டாம். நல்ல தண்ணீரில் சமார் 45 நிமிடம் ஊற வைத்தாலே சாதமாக மாறிவிடும். இதற்காக சுடு தண்ணீர்கூட பயன்படுத்த தேவையில்லை. 

இந்த ரக நெற்பயிர் நல்ல மகசூலையும் தருகிறது. டோர்காட் என்ற பகுதியில் இதனை பயிரிட்டு சோதனை நடத்தியதில் ஏக்கருக்கு 5 டன் மகசூல் கிடைத்தது. மேற்கண்ட தகவலை நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஏ.வி. சர்மா தெரிவித்தார். 

ஒடிசா, மேற்குவங்காளம், பீகார், மேகாலயா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் நல்வோரா நெல் விளச்சலுக்கு ஏற்ற பருவ சூழலில் இருப்பதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.