Header Ads



வெள்ள நிவாரணம் கொடுப்பதில் தாமதம்



(அபு நூறா)

அக்கரைப்பற்றில் ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கரையோரம் முற்றாக நீரில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன் பல வீடுகளும் சேதமடைந்தன. இதனைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பிரதேச செயளாலருக்கு அனுமதி வழங்கினார். 

நிவாரணத்தை வழங்க அக்கரைப்பற்று பிரதேச செயளாலரும் சமூகசேவைப் பிரிவும் உடனடி நடவடிக்கை எடுத்தும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியர் பற்றாக்குறைவால் இதுவரை மக்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்படியிருக்க இன்று 2013.03.05 பெய்த ஒருநாள் மழையினால் மீண்டும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் கிராம உத்தியோகத்தர்களிடம் முறையீடு செய்தவண்ணம் இருக்கின்றனர். நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல முறை ஏற்பட்ட பாதிப்புகளையும் பொறுத்துக் கொண்டு பொறுமையுடன் செயற்படுகின்றனர் பொதுமக்கள். 


1 comment:

  1. அக்கரைப்பற்று கிராம உத்தியோகத்தர்களும் மற்ற அதிகாரிகளும் சேர்ந்து ஆட்டயப்போட ஆரம்பிச்சிருப்பாங்க (கொஞ்சம் கொஞ்சமா) பின்னாடி எல்லாமே வழமைபோல கோவிந்தா கோவிந்தாதான்... இது வயிற்றிற்காகப்போராடுபவனின் பங்கு அதில் கைவைத்து பொழப்பு நடத்தும் இவர்களெல்லாம் மனிதர்காளா.... முஸ்லிமகாளா? அந்தவகையில் தமிழர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது..

    ReplyDelete

Powered by Blogger.