'அரபுக் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுத்துறையில் பூச்சியமாக இருத்தல் கூடாது'
(இக்பால் அலி)
அரபுக் கல்லூரி மாணவர்கள் தம் வாழ்வில் அரசியல். பொருளாதாரம், சமூக காலாசார அறிவியல் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டுதல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதேபோன்று விளையாட்டுத்துறையிலும் வெறும் பூச்சியமாக அரபுக் கல்லூரி மாணவர்கள் இருத்தல் கூடாது என்று பறகஹதெனிய தாரூம் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் செயலாளர் எ. எல் கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.
பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரியின் பள்ளிவாசலில் 21-03-2013 இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளரும் மற்றும் பறகஹதெனிய தாரூம் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் செயலாளர் எ. எல் கலிலுர் ரஹ்மான் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
விளையாட்த்துறையாக இருந்தாலும் அதற்கென ஒழுங்கு கட்டுப்பாட்டு விதி முறைகள் உள்ளன. அதனை சிறந்த முறையில் பேணி நடத்தல் வேண்டும். இஸ்லாமிய சூழலில் இருந்து கொண்டு அதான் சொல்லும் போது தொழுகையை குறிப்பிட்ட நேரத்திற்கு தொழுகின்றோமா என்ற கேள்விக்குறி உள்ளது. ஒன்றைச் செய்யும் போது இன்னுமொன்றுக்காக தம் கடமையை பொடுபோக்காக விட்டு விடும் தன்மை இருத்தல் கூடாது. கல்வித் துறையில் விளையாட்டு துறையும் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. நேரத்தை வீணாக் கழிப்பதைவிடுத்து இஸ்லாமிய ஒழுக்க மாண்புடன் விiளாயாட்டுத் துறையினையும் நாங்கள் நோக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் உஹத் இல்லம் 137 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் பத்ர் இல்லம் 129 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடததையும் அஹ்சாப் இல்லம் 109 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடதையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர் எம். சீ. அன்சார் ரியாதி, பிரதி அதிபர் எஸ். யூ சமீம், விiளாட்டுத்து துறைப் பொறுப்பாளர் முஜிபு ரஹ்மான் மற்றும் ஆசிரியர் குழாத்தினர் பங்கு பற்றினர்.
Teach them sinhala, English, sports in addition.
ReplyDelete