அமெரிக்கா, இஸ்ரவேல் சதி வலையில் சிக்கிக்கொண்ட பொதுபல சேனா
(ABU RIJA)
யூதர்களின் அறிவுரை கூறுகிறோம் என்ற போர்வையில் உலக நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதுடன் அந்த நாடுகளிலே பிரிவினை வாதத்தைத் தூண்டி உள்நாட்டில் யுத்தம் பேரழிவு படுகொலை என்பவற்றை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் முடக்கி வறுமை நிலைக்கு தள்ளி விடுகிறது. இதற்கு காரணம் முதலாளித்தவ ஆதிக்கமேயாகும்.
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பலஸ்தீன், சிரியா, ஈரா மியன்மார், துருக்கி இமற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்களை கொன்றளிக்கப்பட்டுள்ளதோடு இன்றும் அதன் செயற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தற்போது இந்த நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் நலிந்த நிலையில் உள்ளதுடன் உள்நாட்டு யுத்தம் முடிந்தபாடில்லை.
ஆனால் முதலாளித்துவ பொருளாதார நிலையைக் கொண்டுள்ள நாடுகள் இதற்கு பின்னணியாக உள்ளன.காரணம் தங்களுடய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு உலக நாடுகளுக்கெல்லாம் நாங்கள்தான் போலீஸ்காரர்கள் என்பதனை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறான நாடுகளில் இன வெறியைத்தூண்டி குளிர்காய்கின்றனர். ஆனால் அம்மக்கள் இன வெறியைத்தூண்டிவிடும் பொழுது புத்தி பேதலித்துப் போகின்றனர். இன்று உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் தெட்டத்தெளிவாக விளக்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இலங்கை அதற்கு விதி விலக்கு அல்ல.இன்று உலக நாடுகளின் கவனம் இலங்கைப்பக்கம் திரும்பியுள்ளது.'எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுதல் ' என்ற பழமொழிக்கு அமைவாக இந்த இஸ்ரவேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இலங்கையில் மூக்கைநுழைத்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்கின்ற அரசியல் வாதிகளையும் மத வெறி பிடித்த ஒரு சிலரையும் மூளைச்சலவை செய்து பொதுபலசேனா அமைப்பை உருவாக்கி இந்த அழகிய இலங்கையை சீரளிக்கப் புறப்பட்டுள்ளனர்.இதற்கு உடந்தையாக இந்த குறுகிய சிந்தனை படைத்தவர்களின் செயற்பாட்டினால் அழகிய திருநாடு சின்னாபின்னமாக்கப்பட போகின்றது என்பதை பார்க்கும் போதுதான் கவலையாக இருக்கின்றது.பல நூற்றாண்டு காலம் சகோதரத்துடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதே என மூத்த பௌத்த தேரர்கள், மூத்த அரசியல் வாதிகள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள் உரையாடுவதைக் காணமுடிகின்றது.
இலங்கை அரசாங்கம் இந்த நிலை கண்டு திண்டாடுவதை உணர முடிகின்றது முஸ்லிம் அரசியல் வாதிகள், மதத் தலைவர்கள், கல்விமான்கள் அனைவரும் இந்நிலைமையில் பக்குவமாக பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை கையாழ்வதில் முனைப்பாக இருந்து வருகின்றனர்.
இவ் இஸ்ரவேல் சூத்திரத்தில் மாட்டிக்கொண்டுள்ளது பொதுபலசேனா அமைப்பு. இவற்றை பக்குவமாக அரசோடு இணைந்து தெளிவு படுத்தி இப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என இவர்கள் சிந்திக்கின்றனர்.முஸ்லிம்கள் இந்த வேளையில் பொறுமையைக் கையாழ்வது கட்டாயக் கடமையாகும்.
முஸ்லிம்கள் பொறுமையுடன் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கம் மௌனம் சாதிக்கக்கூடாது. இந்த நாட்டை யார் யார் காட்டிக் கொடுத்து நாட்டைச் சீரளிக்க முனைகின்றார்களோ அவர்களை இனம் கண்டு தண்டிப்பதுடன் இந்த நாட்டின் இறைமையையும் மக்களின் பாதுகாப்பையும் நிலை நாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்.
முஸ்லிம்கள் அன்றும் இன்றும் இந்த நாட்டின் இறைமையை பாதுகாத்து வருகின்றனர்.முஸ்லிம்கள் சில்லறை சுய இலாபத்துக்காக என்றும் இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதனை பேரினவாத சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன.
இந்த நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் சகல அரசியல் தலைவர்கள் இமதத் தலைவர்கள், கல்விமான்கள, புத்திஜீவிகள் அனைவரும் மக்களை நல்வழிப்படுத்துவதில் அக்கறையுடன் செயற்படுத்துவதோடு சகோதரத்துவத்தை நிலை நாட்ட உழைக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் இந் நாடு ஒரு பெரும் அழிவை சந்திக்க நேரிடும். குறிப்பாக அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடுவதைவிட்டு மக்களின் நன்மைக்காகவம் இந் நாட்டின் இறைமைக்காகவம் பெருமனம்' கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளதல் வேண்டும்.இதுவே மனித தர்மமாகும்.
Post a Comment