அம்பாறையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி முஸ்லிம்களுக்கு ஹராம் - அசாத் சாலி
(Tm) முஸ்லிம்களுக்கு தயட கிருள - தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஹராமாகும் என முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். இதனால் முஸ்லிம்கள் எவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை அம்பாறை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மத்தலவையில் ராஜபக்ஷ சர்வதே விமான நிலைய திறப்பு விழாவில் சிறுபான்மையின மத நிகழ்வுகள் இடம்பெறவில்லை. இதனால் சிறுபான்மை இன மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் அசாத் சாலி தெரிவித்தார்.
சிறுபான்மை இனங்கள் புறக்கணிக்கப்பட்டபோது, முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் குறித்த நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிச்சயமாக முஸ்லீம்கள் இதைப் புறக்கனிக்க வேண்டும்.சில வேளைகளில் அங்கு பெண்களின் ஹிஜாபுக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு அதனால் ஆண்களுக்கும் பாரியதொரு வளைவு காத்திருக்கக்கூடும் அல்லாஹ் எம்மைப்பாதுகாப்பானாக.நாமும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டுமல்லவா ?
ReplyDeleteஅரசியல் காய் நகர்வில் இது ஒரு முக்கியமான முடிவு.. முஸ்லிம் மக்களே அரசியல் வாதிகளே தயவு செய்து கட்சி, அரசியல் பேதமின்றி இந்த தேசத்துக்கு மகுடம் விழாவை பகிஷ்கரியுங்கள். முஸ்லிம் இளைஞ்சர்களே இந்த பகிஷ்கரிப்பை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்... இது ஒரு முக்கியமான சந்தர்பம் தூங்கி விடாதீர்கள்.
ReplyDeleterauf hakeem..mahinda...iku...kakka..kaluwakooda..ready...idha..poi..perusa..eduthukutu
ReplyDeleteநிச்சியமாக எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். அதற்கு காரணமும் வைத்து இருப்பார்கள்.
ReplyDeleteஎன்ன சகோதரர் அஸாத் சாலி உலம்புறீங்க. முஸ்லிம் அமைச்சர்களுக்கு சோறுபோடுவது ஜனாதிபதியே. சோற்று மணிக்காக ஏங்கி நிற்கும் இவர்கள் பகிஷ்கரிக்கவா போகிறார்கள்? கதையை விடுங்க. முஸ்லிம்களின் கழுத்தை அறுத்தாலும் கைகட்டி நிற்பார்கள் போலிருக்குதே இன்னும் புரியல்லயா?
ReplyDeleteஇதையும் தாண்டி போகும் கூட்டம் முஸ்லிம்கள் இல்லை, அத்துடன் எந்த ஆண்மகனும் அங்கு போகமாட்டான்.
ReplyDelete