பிரிட்டனிலும், பிரான்சிலும் புதிய தொலைக்காட்சி சனல்களை ஆரம்பிக்கிறது அல்ஜஸீரா
பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளில் அல்ஜஸீரா புதிய 2 தொலைக்காட்சி சானல்களை துவக்குகிறது. அல்ஜஸீரா யு.கே என்று பெயர் சூட்டப்பட்ட சானலுக்கு விரிவான நெட்வொர்க்கை உருவாக்குவதாக அல்ஜஸீராவின் சானல் இயக்குநர் ஷேக் அஹ்மத் பின் ஜாஸிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
ஏழாவது அல்ஜஸீரா ஃபாரத்தின் முடிவில் அஹ்மத் பின் ஜாஸிம் இந்த அறிக்கையை வெளியிட்டார். பிரிட்டனில் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து ஐந்து மணிநேர நிகழ்ச்சியை அல்ஜஸீரா ஆங்கில சானலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரெஞ்சு சானல் துவங்குவதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவதே லட்சியம் என்று அஹ்மத் பின் ஜாஸிம் கூறினார்.
2011-ஆம் ஆண்டு அல்ஜஸீரா பால்கன் என்ற பெயரில் போஸ்னியாவின் தலைநகர் ஸரயாவோவில் துவக்கிய சானலை துருக்கி மொழியில் ஒளிபரப்பவும் திட்டமுள்ளது. 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்ஜஸீரா நிறுவனம் அமெரிக்காவின் கரண்ட் டி.வியை விலைக்கு வாங்கியது.
யூதர்களின் செல்லப் பிள்ளையாக இயங்கும் இந்த Al-jazeera எங்கு கிளை அமைத்தால் நமக்கென்ன? இவர்களை இஸ்லாமிய ஊடகமாக நினைத்து ஏமாறும் நமது சகோதரர்களுக்கு சிந்திக்க ஒரு விடயம் முன் வைக்கிறேன். இலங்கையின் LTTE பிரச்சினையில் LTTE இனரின் உரிமைக்காக போராடி செய்திகளை வெளியிட்ட இவர்கள் இன்றைய முஸ்லிம்கள் பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லையே? அது ஏன்? இவர்கள் இருந்தால் என்ன கேட்டால் என்ன? அன்றைய AL -JAZEERA அல்ல இன்று இருப்பது. இது யூதர்களால் அதே பேரில் இயக்கப்படும் யூத மீடியா. ஈராக் யுத்தத்தில் அமெரிக்க குண்டு வீச்சுடன் பழைய AL -JAZEERA வின் குரல் வளை நசுக்கப் பட்டு கொல்லப்பட்டு முடிந்து விட்டது.
ReplyDelete