சிங்கள புதுவருடத்துடன் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கமாட்டேம் - சம்பிக்
எதிர்வரும் சிங்கள புதுவருடத்துடன் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்களை வாங்குவதை முற்றாக நிறுத்துவார்கள் என இனவாத அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் அண்மைய காலங்களில் வெளிப்படையான இனவாத கருத்துக்களை கக்கிவரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, முஸ்லிம் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்கக்கூடாதென்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு எதிர்வரும் சிங்கள புதுவருடத்துடன் சிங்களவர்கள் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முஸ்லிம் அமைச்சர்களை எதேச்சையாக சந்தித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை கூறியவுடன் அங்கிருந்த முஸ்லிம் அமைச்சரொருவர், எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடைபெறும். உங்களுடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அல்ல என சூடாக பதிலளித்துள்ளார்.
அதேவேளை ஹலால் எதிர்ப்பு பிரச்சாரத்தை கச்சிதமாக முன்னெடுத்த சிங்கள பௌத்த அமைப்புக்கள், தற்போது பௌத்த விகாரைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்காக வரும் சிங்களவர்களிடம் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்ற பிரச்சாரத்தையும் தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக சிங்கள பிரதேசங்களில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளுக்கு வரும் சிங்களவர்களில் ஒருதொகுதியினர் பொருட்கள் வாங்காமலேயே திரும்பிச் செல்வதாகவும் அறியவருகிறது.
From the new year ask him to stop filling petrol to his vehicle
ReplyDeleteகண்டியில் நடந்த பொதுபலசேனவின் பொதுமாநாட்டில் கூறப்பட்டவிடயமும் இதுதான் ஆனால் எமதருமை பெளத்தசகோதரர்கள் அனேகமானோ இல்லை இல்லை அனைவரும் முஸ்லிம் ஹோட்டல்களில்தான் சாப்பிட்டார்கள், இதிலிருந்து நாங்கள் நன்றாகபுரிந்துகொண்டோம். பொதுபலசேனவுக்கு நல்லவரவேற்பு உள்ளதென்று, மற்றவர்கள் என்ன சாப்பிடவேண்டும் எங்கு பொருட்களை வாங்கவேண்டும் என்று சொல்வதற்கு இன வாத அமைச்சர் சம்பிக்கவுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியாவின் உறவை நாம் அறுத்துக்கொள்ளமாட்டோமென்று நமது அரசாங்கம் சொல்கின்றது ஆனால் சம்பிக்க சொல்கிறார் இந்தியாவுடன் அரசாங்கம் எதுவித உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாதென்று சம்பிக்கைக்குத்தெரியுமா அயல் நாடொன்றுடனுள்ள உறவை இல்லாமலாக்குவதனால் என்ன நஸ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுமென்று (இல்லவே இல்லை சம்பிக்கைக்கு ஒரு பணியாரமும் தெரியாது)ஆக மன நோயாளி சம்பிக்க ரனவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நல்லவகையில் சிகிச்சைபெற்று அவர் இறைவன் உதவியுடன் அனைத்துமக்களுடனும் ஒற்றுமையாக வாழவேண்டுமென்பதுதான் எமது ஆசை இவருக்குரிய வைத்திய பொறுப்பை அரசாங்கம் பாரமெடுப்பது மிகவும் நல்லது.
ReplyDeleteit's ok no problem we not sell dry fish in our shops.bandaranayaka also try same this policy but it's useless. Mr champica first u call back all singhalis in middle east
ReplyDeleteHello Mr champikks
ReplyDeleteMr Champika neega vanguveega peria periya shop la ellatha makkal enna seivanga enda neega valrathu makal podura gavurava pitchai laye athanala neega solluveenga
ReplyDelete