ஹனூன் ஹாஜியாருக்கு வந்த துணிவு...!
(இ. அம்மார்)
கண்டி நகரில் பிரதான வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வில்லியம் கொபொல்லாவ மாவத்த பிரதான வீதியில் தெய்யன்வலப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுரொட்டிகளை ஒட்டுவதற்காக முச்சக்கர ஒன்றில் வந்த இளைஞர் ஒருவர் சுரொட்டிகளை ஒட்டும்போது அதனை அவதானித்திருந்த அப்பிரதேசவாசி என அழைக்கப்படும் ஹனூன் ஹாஜியார் அவர்களை கடுமையாகத் திட்டி விரட்டிய சம்பவம் ஒன்று 12-03-2013 அன்று நடைபெற்றுள்ளது.
ஹனூன் ஹாஜியார் மறுநாள் காலை கண்டி பொலிஸ் நிலையம் முறைப்பாடு தெரிவிப்பதற்காகச் சென்றிருந்தார்.
அவர் அங்கு ' ஏன் இவர்கள் எங்கள் மனங்களைப் புண்படுத்துகின்றார்கள். இவர்களுக்கு நாங்கள் என்ன அநியாயம் செய்தோம். நாங்கள் கண்டியில் சிங்கள மக்களுடன் எந்தவிதனமான பாகுபாடுமின்றி மிக அந்நியோன்னியமாக ஒற்றுமையுடன் வாழ்கிறோம். நாங்கள் கொஞ்சப் பேர்தான் இருக்கிறோம். அயலவர்கள் எல்லோரும் சிங்கள மக்கள்தான் வாழ்கிறார்கள். எங்களுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் ஏற்படுவதில்லை. அவர்கள் மிக நல்லவர்கள். பௌத்த மதம் அடுத்த மக்களுக்கு எந்தவிதமான தீங்கும் செய்யும்படி கூறவில்லையே. எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க எங்களுக்கு யாருமே இல்லையா?. முஸ்லிம்களைப் புண்படுத்துவம் வகையில் சுரொட்டிகள் கண்டி நகர் எங்கும் ஒட்டியுள்ளார்கள். எனக்கு மனசு கேட்க முடியாமல்தான் இங்கு முறைப்பாடு செய்ய வந்தேன்' என்ற அவர் அவலக்குரல் எழுப்பியுள்ளார்.
அதற்குப் பொலிஸார் கண்டியில் எத்தனை பெரியார்கள், அமைப்புக்கள் எல்லோரும் இருக்கின்றார்கள். இது பற்றி முறைப்பாடு தெரிவிப்பதற்கு எவரும் வரவில்லை. நீங்கள் மட்டும்தான் இங்கு வருகை தந்துள்ளீர்கள். ஏன் மற்றவர்களுக்கு வர முடியாது எனப் போலிஸார் கேட்டுள்ளனர்.
இது குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்யவா அல்லது உங்களிடத்திலுள்ள சுவரொட்டிகளை வந்து நாங்கள் அகற்றிவிடவா எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அகற்றுவது எனில் முறைப்பாடு அவசியம் இல்லை என்று கூறிவிட்டு வீடு வந்துள்ளார்.
சற்று நேரத்தில் பொலிஸார் அங்கு வருகை தந்து அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றியதுடன் ஒரு இரவு முழுக்க அவர் வீட்டுக்கு முழுமையான பொலிஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். இந்த மனிதரைப் போல எல்லோரும் செயற்பட்டால் என்ன? இது ஒரு சமூகப் பிரச்சினை இதற்காக கௌரவம் வெட்கம் தராதரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் ஒன்று பட்டு தற்துணிவுடன் செயற்பட வேண்டிய முக்கிய விடயம்.
I salute kandy police and its officers on behalf of all Muslims!
ReplyDeleteWeldon zainul haji. Allah will be always with as. Alhamdu lilah.
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteAlhamdulullah
ReplyDeletealhamdulillah
ReplyDeleteஇந்த ஹனூன் நானாவின் தைரியத்தையும் செயற்பாட்டையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
ReplyDeleteaihamdulillah.
ReplyDeleteSalam, That Haji should have also made an entry in the police and Well done We should always seek all possible legal actions. Many of them would be thrown to dustbin but at least some of them would survive
ReplyDeleteGreat work
ReplyDeletesubahanalla ippatiyum kotumaikal natakkiratha ISLAththukku
ReplyDeleteMY HEARTFELT THANKS FOR ENTIRE POLICE FORCE.
ReplyDeletePLEASE DO THE BEST ACCORDING TO LAW AND OR
MY HEARTFELT THANKS FOR ENTIRE POLICE FORCE.
ReplyDeletePLEASE DO THE BEST ACCORDING TO LAW AND OR
MY HEARTFELT THANKS FOR ENTIRE POLICE FORCE.
ReplyDeletePLEASE DO THE BEST ACCORDING TO LAW AND OR
நாமும் இலங்கைப்பிரஜை என்ற வகையில் எமக்குரிய உரிமைகளை சட்டரீதியாக பெற மற்றும் எமக்கெதிரான செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முன்வரவேண்டும்.
ReplyDeleteஹானுன் மாமா ... பர்லிமென்ட் லா தூங்குற நம்ம ஆடு ஹளுக்கு மத்தியில . நீங்க ஒரு சிங்கம் மாமா ..
ReplyDeleteThat is the duty of a Muslim, Allah strong hajis wealth and soul.
ReplyDelete