'உடைந்து போகாமல் இருக்கவேண்டும்'
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சுய சரிதை வெளியீட்டு விழாவில் பிசிசிஐ நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
பிசிசிஐ அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், 'The Test Of My Life' என்ற பெயரில் சுய சரிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட காலங்களில் அவரின் அனுபவங்களை யுவராஜ் பகிர்ந்துள்ளார்
இந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலத்தில் நான் யுவியை பார்க்க சென்றபோது யுவி முன்னிலையில் உடைந்து போகாமல் இருக்கவேண்டும் என்று என் மனைவி அஞ்சலியிடம் கூறினேன் ஆனால் என்னால் என் அழுகையக் கட்டுப் படுத்த முடியவில்லை. என் மனைவியுடன் யுவராஜின் வியாதி குறித்து விவாதித்தபோது, யுவியின் வியாதியின் தன்மையை உணர்ந்தேன்.
யுவராஜ் என் உடன் பிறவா சகோதரன். நானும் யுவியும் ஒன்றாக இணைந்து உணவு சாப்பிட்டபோது, யூவியின் உற்சாகத்தை கண்டேன், நிச்சயம் கிரிக்கெட்டில் யுவராஜ் திரும்பி வருவார் என்று அப்போதே நினைத்தேன்." என்று சச்சின் பேசினார்.
இந்த விழாவில் பிசிசிஐ கேப்டன் தோனி, கோஹ்லி உள்ளிட்ட வீரர்களும் கலந்து கொண்டனர். inneram.com
Post a Comment