அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு..!
(கே.சி.எம்.அஸ்ஹர்)
மகிந்தசிந்தனையின் அடிப்படையில் தகவல் தொழினுட்பத்தை கிராமங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஜனாதிபதி வழிகாட்டலில் நாட்டில் உள்ள பிரதேச செயலகங்கள் தோறும் அறிவகங்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.அறிவகங்கள் மூலம் பின்வரும் சேவைகள் நடைபெறுகின்றன.
இணைய சேவைகள்
மின்அஞ்சல் சேவை
அச்சுச் சேவை
வருடிச்சேவை ஸ்கேனிங்
கணனிப்பயிற்சிகள்
கழகங்கள்,அரசசார்பற்ற உள்ளுர் நிறுவனங்கள்,சமய நிறுவனங்கள்,பாடசாலைகள் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு இவ் அறிவகங்கள் செயற்பட்டு வருகின்றன.இவ் அறிவகச்சேவை மீள்குடியேற்றப்பகுதியான முசலிப்பிரதேசத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை.இச்சேவை கிடைக்கப்பெற்றால் பொதுமக்கள்,மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் நன்மை அடைவார்கள்.
ஆகவே, தகவல் தொழினுட்பத்தில் பின்தங்கிக் காணப்படும் முசலிப் பிரதேசத்திற்கு விரைவில் அறிவகங்களைப் பெற்றுத்தர அமைச்சர் றிசாத் பதியுதீன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
That's not bad
ReplyDeleteIf you send a request letter to Hon'ble Minister, Definitely he will take proper action as soon as possible. Dont worry. One of the talented & service minded miinister he is!
ReplyDelete