Header Ads



அச்சுறுத்தியவரின் கதை பரிதாபத்தில் முடிந்தது


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள காஞ்சிரங்குடா என்னுமிடத்தில் பாடசாலை மாணவர்களையும், ஆற்றில் மீன் பிடிப்போரையும், பிரதான வீதியில் பயணிக்கும் பாதசாரிகளையும் பயமுறுத்தி வந்த பாரிய முதலையின் கதை முடிவடைந்துள்ளது.

இம்முதலையானது காஞ்சிரங்குடா ஆற்றிலிருந்து, அருகே உள்ள குளத்திற்குப் போவதற்காக அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியைக்  கடக்கும் போது கனரக வாகனமொன்றில் மோதுண்டு இறந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.