சிரியாவில் கிளர்ச்சியாளர் படையின் முக்கிய தளபதி குண்டுவெடிப்பில் மரணம்?
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இவர்களில் சிலர் ஆயுதமேந்தி அரசு படைகளுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். சிறு, சிறு ஆயுதப் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து தளபதி ரியாத் அல் ஆசாத் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்.
சிரியாவில் உள்ள மயாதீன் நகருக்கு இன்று ரியாத் அல் ஆசாத் வந்தார். அப்போது அவருடைய காரில் யாரோ சக்தி வாய்ந்த வெடிகுண்டை பொருத்தி விட்டனர். கார் புறப்பட்டு சென்றதும் அந்த குண்டை மர்ம நபர்கள் ரிமோட் மூலம் வெடிக்க செய்தனர். இதனால் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியது.
காரின் உள்ளே இருந்த ரியாத் அல் ஆசாத் மற்றும் அவரது உதவியாளர்கள் படுகாயமடைந்தனர். ஆதரவாளர்கள் அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment