Header Ads



நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக..!



(TU) நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக காட்சியளிக்கிறது. ஈராக்கை ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்நிலையில் பி.பி.சி நடத்திய ஆய்வில், நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக

பி.பி.சி நடத்திய ஆய்விற்கு தலைமை வகித்த பீட்டர் டெய்லர் கூறியது:உளவுத்துறை ஏஜன்சிகளின் தகவல்களைக் குறித்த ஃபாரன்சிக் அறிக்கைகளை பி.பி.சி ஆய்வுச் செய்தது. சதாம் வசம் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்ற ரகசிய புலனாய்வு அறிக்கை தவிர, ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்க-பிரிட்டன் அரசுகள் கூறிய அனைத்து நியாயங்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபணமானது.

ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி பி.பி.சியில் வெளியிடான ‘உலகை முட்டாள்களாக்கிய உளவாளிகள்’ என்ற நிகழ்ச்சியில் ஈராக் ஆக்கிரமிப்புக் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆக்கிரமிப்புப் போரை துவக்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஈராக்கில் எவ்வித பேரழிவு ஆயுதங்களும் இல்லை என்று அமெரிக்க-பிரிட்டன் உளவுத்துறை ஏஜன்சிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தன. ஆனால், அவர்கள் அதனை புறக்கணித்தார்கள். அதுமட்டுமல்ல, கடுமையான சதாம் எதிர்ப்பாளர்களைத்தாம் அமெரிக்க-பிரிட்டன் உளவாளிகள் ஈராக்கில் அணுகினர்.

சதாமின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய நாஜி ஸப்ரி ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களின் வரம்பில் உள்ள ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று பாரிஸில் மத்தியஸ்தர் மூலமாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் தலைவருக்கு தெரிவித்திருந்தார். ஈராக்கின் உளவுத்துறை தலைவர் தாஹிர் ஹபூஸ் பிரிட்டன் உளவு அமைப்பான எம்.ஐ 16 அதிகாரிகளுடன் ஜோர்டானில் வைத்து ஈராக்கின் உண்மையான ஆயுத பலம் குறித்து தெரிவித்திருந்தார். ஆனால், இவற்றில் அமெரிக்காவுக்கு திருப்தி ஏற்படவில்லை. மேலும் இத்தகவல்களை நம்பவும் தயாராகவில்லை என்று பி.பி.சி கூறுகிறது.

45 நிமிடங்களில் செயல்படும் திறன் கொண்ட இரசாயன ஆயுதங்கள் ஈராக் வசமிருப்பதாக ஆக்கிரமிப்புப் போரின் போது பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேயர் கூறியதன் அடிப்படையையும் பி.பி.சி ஆய்வுச்செய்தது. ஆனால், இது ஈராக்கில் இருந்து ஜோர்டானிற்கு குடிபெயர்ந்த கடுமையான சதாம் எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுக்களே இவை. அவர்களோ சதாமை கவிழ்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர். இத்தகைய குற்றச்சாட்டுக்களையெல்லாம் அமெரிக்க-பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக மக்களை நம்பவைத்து ஆக்கிரமிப்பிற்கு களத்தை உருவாக்கினர் என்று பி.பி.சி கூறுகிறது.

2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி சதாம் ஹுஸைனை ஆட்சியில் இருந்து அகற்றி இறுதியில் அவரை தூக்கிலிட்டு கொலைச் செய்யக் காரணமான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா துவக்கியது.

1 comment:

  1. டோனி பிளேயர், டபிள்யூ புஸ், ஒபாமா, 3வரும் பன்னாடைகள்.

    ReplyDelete

Powered by Blogger.