இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் - அமெரிக்கா தெரிவிப்பு
இலங்கை தொடர்பான தனது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகாண்பதில் அரசாங்கம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டதால் அதன் பின்னர் வாஷிங்டனின் இலங்கை தொடர்பான கொள்கை மாறிவிட்டதாக ஜனநாயகம், மனித உரிமைகள்,தொழிலாளர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலாளர் மைக்கேல் எச்.பொஸ்னர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சுயாதீன கட்சி சார்பற்ற புத்திஜீவிகள் அமைப்பான வெளியுறவுகள் பேரவையில் உரையாற்றும்போதே பொஸ்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009 இல் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சில விடயங்களுக்கு சவால் விடுப்பது தொடர்பாக தயக்கமான நிலைமை காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதும் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் உள்ளீர்க்கப்படுவதை அமெரிக்கா சமாளித்திருந்தது.நாங்கள் அதிகளவில் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை மேற்கொண்டோம். உண்மையில் அது மாற்றத்தினை பிரதிபலித்திருந்தது . ஏனெனில், நாங்கள் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கவில்லை என்று பொஸ்னர் கூறியுள்ளார்.
அதேசமயம் தற்போது இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தீர்மானம் புதிய சூழ்நிலையை கருத்தில் கொண்டதாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன் பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக வலுவூட்டப்படவுள்ளது. அரசாங்கத்துடன் கடுமையான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். மனிதஉரிமை விவகாரங்களை எழுப்புவதற்காக என்று பிரதி அதிகாரிகளில் ஒருவர் அங்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
சலால்களை எதிர்கொண்டபோதும் இலங்கையை அமெரிக்க கையாண்ட வழிமுறையானது வெற்றியானது என்பது தனது அபிப்பிராயம் என்றும் பொஸ்னர் கூறியுள்ளார்.
Post a Comment