Header Ads



கறுப்பு பட்டியனிந்து எதிர்ப்பை வெளிக்காட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 7ம் திகதி நடைபெறும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்க தீர்மாணித்துள்ளதாக ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார் 

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த சில மாதங்களாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதும் புனித இஸ்லாத்தின் மீதும் பாரியளவிலான வன்முறைகளும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் நலாபுரங்களிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருவதுடன் தங்களது மார்க்க அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். 

நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்சி நிரலின் கீழ் பௌத்த இனவாதிகளின் செயற்பாடு சுதந்திரமாக அரச பாதுகாப்புடன் நடந்தேறுகின்றது முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ வன்முறைகள் நடந்தேறியிருக்கின்றது அது விடயமாக இன்று வரைக்கும் ஒருவரேனும் கைது செய்யப்பட்டதாகவோ அல்லது அதற்காக நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்தாகவோ கிடையாது இந்த நாட்டில் காவிவுடையுடன்  மேற்கொள்ளப்படும் எந்த விதமான அநிதிகளுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் சட்ட நடவடிக்கை கிடையாது என்பதை கடந்த கால நிகழ் கால சம்பவங்கள் சான்றாகும்

இவ்வாறு அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநீதிகளையும் அடக்குமுறைகளையும் தடுக்க தவறி விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 7ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெறும் மாதாந்த சபை அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்கவுள்ளதாகவும் இதைப்போன்று ஏனைய சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மேற்படி அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு படடியனிந்து கலந்து கொள்வதோடு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அமர்வின் போது கறுப்பு பட்டியனிந்து தங்களது எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் 



5 comments:

  1. உங்கட அரசியல் விளையாட்ட நீங்க முஸ்லிம்களோட கலக்காதிங்க....இதுல வாற நன்மய விட கூடுதலா தீமை தான் மிஞ்சும்,,,,,,கண்டில மாடு அறுக்க கருப்பு பட்டி அணிவாணுகள், காலில ஹபாய் உடுத்த அணிவாணுகள்......முதல்ல உங்க தலைவர ட்ரௌஸர் போட பழக்குங்க

    ReplyDelete
  2. Karuppu patti ethaiyum saathiththu vidaathu brother...aakka poorvamaana valiyai thedunkal...

    ReplyDelete
  3. அட மக்குகளே நீங்கள் பேச வேண்டிய காலம் கடந்து விட்டது. இப்போது வாய்மூடி பேசாது இருந்தாலே போதும் எங்கு எப்படி எதைச்செய்யனும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வந்து விட்டது.பிரச்சினைகளை அதிகரிக்கச்செய்யாது வாய்மூடி இருந்தாலே போதுமானது.

    ReplyDelete
  4. தலையிடிக்கு தைலம் தடவுவது போன்ற செயலே இது. எவருக்கும் பிரயோசனம் அளிக்காது.

    ReplyDelete
  5. கொஞ்சம் சரி அறிவு இருக்கா..????? உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் ..!!! இந்த பிரச்சினைக்கு முழுக்காரணமும் இந்த ராஜபக்ச அன் கம்பனி தான்... பொதுபல சேனா என்பது இவர்களின் (உண்மையான) ஒரு முகம். உமக்கும் உமது தலைவருக்கும் அவரது வாலுகளுக்கும், தங்களுது பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் முஸ்லிம்களையும் மார்க்கத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துள்லிர்களே... முடிந்தால் உமது தலைவருக்கு கருப்புக்கொடி காட்டுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.