Header Ads



கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை



(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் மாகாண சுற்றுலாத்துறையின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பில்  திட்ட மும்மொழியும் ஒரு நாள் விஷேட செயலமர்வு இன்று 21.03.2013 வியாழக்கிழமை பாசிக்குடா ஹோட்டல் அமர்த்திஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு  மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபையின் தலைவருமான எம்.றிஸ்லி இல்யாஸ், வாழைச்சேனை கோறளைப்பற்று, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர்கள், யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் தங்கவேல் சக்திவேல் உள்ளிட்ட விஷேட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் விஷேட வாளவாளராக கலிபோனியா நாட்டை சேர்த்த சுற்றுலாத்துறையின் சர்வதேச ஆலோசகர் திரு. றோபோட் பென்ட்லி கலந்து கொண்டு, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பாகவும், எதிர்கால செயற்பாடும் தற்போது உள்ள செயற்பாடுகள் குறித்;தும் விளக்கமளித்தார். 

இதன் போது கருத்து தெரிவித்த அவர், உலக நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி 2012ஆம் ஆண்டில் 4 சத வீதமாகும். அதே போன்று ஆசிய நாடுகளில் சுற்றுலாத்துறை வளர்ச்சி 5 சத வீதமாகும். இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி 14 சத வீதமாகும். இலங்கையில் விஷேடமாக  கிழக்கு மாகாணம் சுற்றுலா துறையில் அதீத வளர்ச்சியை எட்டி வருகின்றது. இதனை முறையாக கையாழும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை சகல வளங்களையும் கொண்டுள்ள மாகாணமாக மாற்றமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி, கூட்டுறவுக்கட்ட கடைத்தொகுதி அபிவிருத்தியும் இதில் உள்ளடங்கும் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மாவட்ட செயலகம் தயாரித்து கொண்டிருக்கும் 5ஆண்டு திட்டத்தில் சகல விடயங்களும் உள்ளடக்கப்படும் எனவும், சுற்றுலா துறையின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயலகத்தின் நிருவாக கட்டடத்தை கூட  கோட்டையில் இருந்து வேறு இடத்திற்கு அகற்ற நடவடிக்கை எடுத்து கொண்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த யார் யாரொல்லாம் தயாராக இருக்கின்றார்களோ அனைவரும் மாவட்ட செயலகத்துடன் இனைந்து செயற்படுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கிறேன் என தமது உரையில் குறிப்பிட்டார்.





No comments

Powered by Blogger.