Header Ads



சமூகத்திலுள்ள களைகளை பிடுங்குவோம்..!


(safran saleem)

இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்களது இலக்குகள் பள்ளிவாசல்கள், மத சின்னங்கள், ஹிஜாப், ஹலால், வர்த்தகம்,  உரிமைகள் என பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றன. அவர்கள் இனவாத செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துகின்றனர்.

அல்லாஹ்வின் கிருபையால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் சில அமைப்புக்கள்  இலங்கை  முஸ்லிம்  சமுகத்துக்கு அளப்பரிய சேவையை பல வகையிலும் செய்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் ஆகும். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மேலும் மேலும்  அருள்பாளிக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக இனவாதிகள் ஒரு பக்கம்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் எம்மில் சில அமைப்புக்களும் தனி நபர்களும் எதிரான நச்சுக்கருத்துக்கருத்துக்களை பரப்பி வருகின்றமை கவலையான விடயமாகும். இவர்களைப்போல் இன்னும் சில சமூகத்தை காட்டிக் கொடுக்கும் நயவஞ்கர்களும் நம்மில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை ஆகும். இக் களைகளை இனங்கண்டு பிடுங்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும். 

பல பள்ளிவாசல்கள் இனவாதிகள் தாக்கப்பட்டிருந்த போதும், எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளில் ஒருவர் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்று சொன்னமையை என்னவென்று சொல்ல முடியும்.

அது மட்டுமல்லாது அண்மையில் அரசில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சி ஒன்றினூடாக கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான முஸ்லிம்  பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் அவர் ஒரு முஸ்லிமா? என சிந்திக்க வைத்தது. அவருடைய கருத்துக்கள் வருமாறு

1.   ஹலால் என்பது ஒரு முட்டாள் தனமான ஹராம்.

2.   புர்கா அடிப்படை வாத்தைத் தோற்று விக்கிறது. பெண்களின் ஆடை முறைக்கு உதாரணமாக ஷேக் ஹஸீனாவையும், பெனாஸிர் பூட்டோவையும் சொல்கிறார். எமது பெண்களுக்கு முன்மாதிரி உம்மஹாதுல் முஹ்மினீன்களும், ஸஹாபா பெண்மணிகளுமே என்பதை இவர் அறிய வில்லையா?

இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவோர் எமது சமுகத்துக்கு அளப்பரிய சேவையை பல வகையிலும் செய்து வரும் அமைப்புக்களிடம் அவர்கள் குறை காணும் விடயங்களை குறித்து கலந்துரையாடாது, ஆலோசனைகளை வழங்காது நேரடியாக ஊடகங்கள் முன் வந்து விமர்சிக்கிறார்கள். இவர்களது கருத்துக்கள் இனவாதிகளின் இனவாத செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக காணப்படுகிறது. இவர்கள் இதன் மூலம் சமூகத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்பது தான் உண்மை.

அண்மையில் எதிர் கட்சித் தலைவர் சொன்னது போல் ஹலால் விடயத்தில் எமது சமூகமே மூன்று கருத்தில் காணப்படுகிறது. எமது அறியாமை, சுய லாபம், பொடு போக்கு, சமூக அக்கறையின்மை போன்றவையே இதற்கு காரணம்.  ஊர் பிளவு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதனை மனதில் நிறுத்த வேண்டும். 

இவர்கள் போன்ற சமூகத்திலுள்ள களைகளை இனங் கண்டுபிடுங்க வேண்டியது சமூகத்தின் அவசரமானதும் அவசியாமானதுமான கடமையாகும்.   அறியாமையிலுள்ளவர்கள் கருத்துக்களை வெளியிடாது குறித்த விடயம் சம்பந்தமான அறிவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட குரோதங்களை மறந்து சமூகப் பற்றுடன் ஒன்று சேர வேண்டும்.          

2 comments:

  1. yess you are right,if our community united no one cant shake us.

    ReplyDelete
  2. களையை பிடுங்குவது யார்?

    ReplyDelete

Powered by Blogger.