சிலி நாட்டில் நடைபெறும் மனித உரிமைகள் செயமலர்வில் பங்கேற்பு
(இ. அம்மார்)
இன்று பொதுவாக உலக ரீதியாக மனித உரிமை ஒரு பெரிய விடயமாகப் பேசப்படுகின்ற போதும் எல்லா நாடுகளிலும் அரசியல் அமைப்புக்களில் மனித உரிமை என்பது உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது உத்தரவாம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அனைத்து நாடுகளிலும் மனித உரிமை மீறல் ஒரு பரந்து பட்ட விடயமாகத் தான் இன்று காணப்படுகின்றது என்று கண்டி மனித அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம் தெரிவித்தார்.
பெண்கள் மனித உரிமை தொடர்பாக சிலி நாட்டில் நடைபெறும் செயமலர்வுக்கு இம் மாதம் எட்டாம் திகதி விஜயம் மேற்கொள்ளும் இரு மாணவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கண்டி மனித அபிவிருத்தி நிறுவகத்தில் தலைமையகத்தில் நடைபெற்றது அதன் போது கண்டி மனித அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்நது பேசுகையில்,
இலங்கையைப் பொறுத்தவரையிலும் மனித உரிமை மீறல்கள் எனப் பல சம்பவங்கள் நடந்தாலும் கூட இந்த மனித உரிமை மீறல் என்பது பற்றிப் பேசும் போது போதுவாக மனித உரிமை என்பதைப் பற்றி பேசுவதுதான் எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மனித உரிமை மீறல்களில் வந்து குறிப்பாக மக்களின் இன்னொரு பிரிவினரான பெண்கள் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்தாலும் கூட மனித உரிமை மீறல் எனப் பேசப்படுவதில்லை. எங்கெடுத்தாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் மனித உரிமை ஒரு பொது விடயமாக இருப்பதனால் ஆரம்ப காலத்திலுள்ள மக்கள் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எவ்வாறு செயற்பட்டனர். அவர்கள் தங்கள் மீறல்களுக்கு எதிராக எவ்வாறு குரலை எழுப்பினர் என்பதனை அடையாளம் கண்டு அந்த அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதன் மூலமாக நிகழ்கால சந்ததியினர் குறிப்பாக நிகழ்காலப் பெண்கள் மனித உரிமை மீறல்களுக்கு எவ்வாறு செயற்படுவது பற்றி வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் மனித உரிமைகளுக்கான இளம் பெண் தூதுவர் என்று கண்டி மனித அபிவிருத்தி நிறுவகமும் சிலியை மையமாகக் கொண்டிருக்கின்ற 'மட்டில்லா ஜொஸ்லி பேஸ் பவுண்டேஷன'; என்ற நிறுவகமும் ஐக்கிய அமெரிக்காவில் இருக்கின்ற அதாவது மனட்சாட்சிக்கான நிறுவகங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்புக்கள் இணைந்துதான் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.
அந்த வகையிலே இன்றைக்கு சிலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்களில் ஒரு நுஸ்ரத் பேகம் இன்னொரு மாணவி ஜயந்தி. இம்மாணவிகள் இத்திட்டத்தின் முதற் கட்டமாக வலைப்பின்னல் ஊடாக ஸ்கைப் ஊடாக கலந்துரையாடல் இலங்கையில் நடைபெற்றது. அந்தக் கலந்தரையாடலில் இவர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த டிசம்பர் மாதம் சிலி நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் அமெரிக்காவைச் சேர்ந்த இரு மாணவிகளும் வருகை தந்து இந்தச் சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கருத்துப் பரிமாறல்கள் செய்து கொண்டதன் முடிவாக தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வகையிலே சிலிக்குச் செல்கின்ற இந்த இரு மாணவிகள் அங்கு செல்லும் போது எங்களுடைய பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதன் ஊடாகவோ அங்குள்ள பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுத்தார்கள் அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு வெற்றி கண்டார்கள் என்பதனை இவர்கள் இங்கு வருகை தந்து பகிர்ந்து கொள்வதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலி நாட்டுக்குச் செல்லும் பெற்றோர்களும் மற்றும் அப்பாடசாலை ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
plz contact with me, im muhammad sabhan from chile( imam of masjid nur al islam en chile). 0056989933497
ReplyDelete