Header Ads



இலங்கைக்கு எதிரான இறுதி அறிக்கையை அமெரிக்கா சமர்ப்பித்தது


இலங்கைக்கு  எதிரான இறுதியான தீர்மான வரைபை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா  சமர்ப்பித்துள்ளது.  ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் செம்பர்லைன் டோனஹே இந்த தீர்மான வரைபை பேரவையில் சமர்ப்பித்தார். 

அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு 32 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. 

ஒஸ்ரியா, கனடா, குரோசியா, பெல்ஜியம், டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து. இத்தாலி, லிச்ரென்ஸ்ரெய்ன், லித்வேனியா, மால்டா, மொன்ரினிக்ரோ, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சென்.கிட்ஸ் அன் நெவிஸ், சுவீடன், சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன. 

முன்னர் வெளியான தீர்மான வரைபுகளில் இருந்த கடுந்தொனி இறுதி வரைபில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிகளுக்கு முன்அனுமதி இன்றி இலங்கை வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் நிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், போர்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற விடையத்தையும் அமெரிக்கா நீக்கியுள்ளது.

1 comment:

Powered by Blogger.