Header Ads



தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியுமான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலருடன் சந்திப்புகளையும் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரின் ஏற்பாட்டில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க இது தொடர்பில் பல  தொகுதி ரீதியிலான சந்திப்புகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் இதன் முதல் சந்திப்பு இம் மாத இறுதியில் குருநாகலிலும் இரண்டாவது சந்திப்பு அநுராதபுரத்திலும் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இச்சந்திப்புகளில் தற்போதைய அரசில் உள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்களான இரு அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின்  உள்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனது கணவரான  விஜய குமார துங்கவின் நினைவு தினம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற போது அதில்  கலந்து கொண்டு பேசிய சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இந் நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைய வேண்டுமென வலியுறுத்தியதுடன் தற்போது பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துவோர் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ean jail paarka aasaiya ?

    ReplyDelete
  2. கண்டிப்பாக புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டில் நாம் ஒவ்வொருவரும் படும் அவதிகள் அனைத்துக்கும் நல்ல தீர்வொன்றைக்கொடுக்கவேண்டும் இதற்கமைய சகல மக்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

Powered by Blogger.