அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம்!
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன். இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன் பயணிக்க முடியாத அச்சம் நிறைந்த சூழலினை அண்மைக்கால சம்பவங்களும், இனவாத உணர்வலைகளைத் தூண்டுகின்ற கோசங்களும் நாளுக்கு நாள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. என்ன நிலை வந்தபோதிலும் அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம் என நகர சபை உறுப்பினர் ஹாஜியானி. ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
மாதர் சங்கங்களின் மகளிர் தின நிகழ்வு காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் மாதர் சங்கங்களின் இணைத் தலைவிகளின் தலைமையில் மாதர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ;சல்மா அமீர்ஹம்ஸா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இஸ்லாமியப் பெண்கள் தலைநிமிர்ந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்நிலையினை அடைவதற்கு பல சோதனைகளையும், வேதனைகளையும் துச்சமாக நினைத்து வெளிச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, இவற்றுக்கு முட்டு;க் கட்டையாக சில இனவாதச் சிறு குழுக்கள் அவர்களின் கால்புணர்ச்சியின் காரணமாக, எமது சமயப் பெண்களின் அடிப்படை ஆடைகளின் அர்த்தம் புரியாமல் அதனை மடடு;ப்படு;த்த அறிக்கைள் இட்டு;க் கொண்டிருக்கி;ன்றனர்.
உலக நாகரிகத்தின் உன்னதமான ஆடை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'அபாயா'வினை அணியக் கூடாது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? உண்மையான முஸ்லிம் இஸ்லாத்திற்காக, அதன் நாகரிகத்தை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுத்த வரலாற்றுச் சொந்தக்காரர்களின் பரம்பரையில் வந்த நாம,; இச் செய்தியைச் கூறும் மிலேச்சத்தனமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எமது பெண்ணினம் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறி;க் கொண்டிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி, மருத்துவம் மற்றும் இன்னோரன்ன உயர்ந்த துறைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது என்பதை இந்த சந்தோச நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பெரும்பான்மை சமுகத்தினர் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஒரு பக்கம் உணர்த்திக் கொண்டிருக்கும் போது, இனவாதம் பேசுகின்ற சிறு குழுவுக்கு சிறகு முளைத்தது எப்போது? இவர்களின் முயற்சியினை சுக்குநூறாக்கி தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்குமுண்டு. ஏனெனில் இது சமூகப் பிரச்சினை.
இன்று எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டு அவர்களைத் தூற்றுவதில் அர்த்தம் கிடையாது. பொறுப்புச் சொல்ல வேண்டி கடற்பாடு அவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவி;ல்லை. எமது சமுகத்தினரும் இவ் விவகாரத்தில் ஒற்றுமையுடன் எமது உரிமைகளுக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் போதுதான் வெற்றியின் நிலைகளைத் தொடமுடியும்.
'ஹலால்' சான்றிதலை விட்டுக் கொடு;த்த விவகாரம் நாட்டில் முரண்பாடுகள் வளரக்கூடாது என்பதற்காகத்தான் என்பதை இஸ்லாமியர்கள் முன்மாதிரியாக செயற்பட்டார்கள். இதேபோல் பெண்களின் அழகிய ஆடையாகிய அபாயாவினை விட்டுக் கொடு;க்க ஒரு போதும் இடமளிக்கப்; போவதில்லை. ஏனெனில் இந்த ஆடையினை அணியுமாறு எவரும் இதுவரை வற்புறுத்தவில்லை. பெண்களுக்கு ஒழுக்கமமான, பாதுகாப்பான ஆடை என உலகில் கணடறியப்பட்ட ஆடை இந்த அபாயாதான்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள், புதிய சிந்னையாளர்களின் கருத்துக்கள் என எமக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவிக்காமல் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய நல்ல தருணம் இதுவாகும். அதுமட்டுன்றி பெண்கள் அமைப்புக்கள் அணிதிரண்டு தங்களது எதிர்ப்புக்களை இந்த பிரிவினைவாதிகளுக்கு காட்ட வேண்டும்.
ஈரான் நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் மிகவும் பலத்துடன் தங்களது உரிமைகளைப் போராடிப்n;பற்றுக்கொள்கிறார்கள்;. பெண்களை கண்கள் போல் மதிக்க வேண்டும் என்று மகத்தான வழிகளைக் கூறிச் சென்ற மாநபி (ஸல்) அவர்கள் விரோதியினை மன்னி;த்தார்கள். நாமும் மன்னிக்கும் மனப்பாங்குள்ள பெண்களாக சகல விடயங்களிலும் திகழ வேண்டும்.
பெண்களுக்கு சமூக, பொருளாதார, கலாசார விடயங்களில் ஆளுமை, ஆற்றல் இருந்த போதிலும் அதனைப் பயன்படுத்துவதற்கு வளங்களும், வலுவூட்டல்களும் இல்லாத போதுதான், பெண்ணின் முன்னேற்றமானது தடைப்படுகிறது. சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுகின்ற பெண்கள் எண்ணி;க்கையில் குறைவானவர்களாக இருக்கிறார்கள். பெண்களி;ன் பிரச்சினைகளை பெண்களே தீர்த்துக் கொள்ள அறிவூட்டல்கள் அவசியம்.
பெண்; பலவீனமானவள் என ஒருபோதும் எண்ணக்கூடாது. வலிமையுடையவள் என நினைத்தால் வலிமைமிக்கவளாகவே ஆகி விடுவாய். என்னால் இயலாது என்று ஒரு போதும் சொல்லாதே! ஏனெனில் ஒரு பெண் வரம்பில்லா வலிமை பெற்றவள். வாழ்வின் வெற்றி உனது உடல் பலத்தைக் காட்டிலும் இஸ்லாமியப் பலத்தில்தான் உள்ளது. நம்பிக்கை கொண்ட பெண் வாழ்வில் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் எதிர்த்து நிற்கும் மனம் இருப்பின் வாழ்வில் வெற்றி காண்பது உறுதி என மேற்கண்டவாறு சல்மா அமீர் ஹம்ஸா கருத்துத் தெரிவித்தார்.
muthalla neenga habayawa podunga umma neenga
ReplyDeleteஅபாயாவைபோன்றே உங்கள் ஆடையில் மாற்றம் ஆனால் அபாயாவுக்கு போராட நீங்கள் அபாயா அணிவது அபாயாவை கழைய கோறும் இனவாதிகளுக்கு கொடுக்கும் முதல் அடி நீங்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண்சமூகமும் அபாயாவை அன்றி ஏனைய அணைத்து ஆடைகளையும் தூக்கி விச்சவேண்டும் பகிறங்கமாக அணிவதில் இருந்து சொந்த வீட்டில் விரும்பியதை அணியுங்கள் ஆனால் வெளியேறி பகிறங்கான பொது இடங்களில் அபயாவை அன்றி வேறு ஆடைகளை புறகனித்து இனவாதிகளின் மூஞ்சில் கரியை பூசுங்கள் கன்னிய மிக்க முஸ்லிம் மாதர் குலமே???
ReplyDeleteFIRST COVER YOUR SELF(INCULUD VIOCE)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹபாயா (ஹியாப் ) என்பது என்றால் என்னவென்பதே நம் சகோதரர்களுக்கு புரியாமல் உள்ளது நமது மார்க்கம் பெண்களை முகமும் இரு கரண்டை கைகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க சொல்கிறது அதற்க்கு பெயர்தான் ஹியாப் அதை விடுத்து இஸ்லாமிய பெண்கள் முழுவதும் மூடி மறைக்க வேண்டும் என்று கட்டாயபடுத்துவதும், சில பெண்கள் முகம் தெரியாமல் மறைத்து கொள்வதும் பெரும் வழிகேட்டில்தான் கொண்டுபோய் சேர்க்கும் .
ReplyDeleteஉதாரணத்திற்கு நான் வேலை பார்க்கும் நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் முகத்தை மறைப்பதனால் வழிகேட்டில் செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல நம் நாட்டில் கூட பஸ்ஸில் பயணம் செய்யும் போது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பெண்ணா,சிங்கமா, புலியா? என்று பயந்து அப்பேருந்துகளில் பயணம் செய்வதையும் தவிர்த்து இருக்கிறேன்.
இதே போன்றுதான் மற்ற மதத்தினரும் சிந்திப்பார்கள் என்பதை உணர்ந்து இஸ்லாம் (கூட்டாமலும்,குறைக்காமலும்) எப்படி நம்மை நடக்க சொல்லியிருக்கிறதோ அதன் படி நடந்தால்.
நாமும் நன்றாக இருக்கலாம் மற்றவர்கள் பார்வையும் நமை சீண்டாது எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அவன் கூரியாவாரும்,நபி (ஸல்) அவர்கள் எப்படி வாழ சொன்னார்களோ அப்படிப்பட்ட மக்காளாக வாழ அருள் புரியட்டும்.
Muhattai tirandal ennawaahum moodiye iwwalawu piratchanai yaaro oruwan ulara marka ariwindi western idia issu panna ungalukku yar anumadi koduttadu muftin !? Awarhale ?
Deleteநியாஸ் உங்களுக்கு எப்படி அபாயா வேண்டுமோ அதுபோலதான் கன்னியமான பெண்களுக்கு முகத்தை மறைக்க வேண்டும் பொதுபலசேனை அபாயாவை கழைய கோறுகையில் எப்படி கோபவருகிறது அதுபோன்றுதான் இஸ்லாதின் பேரில் முகத்தை அந்நிய ஆண்கள் ரசிச்சி ருசிச்சி கை...ல போட காட்டு என்ங்கிற உங்க ஆசையையும் பார்த்து கோபம் வருகிறது பெண்கள் அப்யாவுக்குமேலால் எப்படி யெல்லாம் மறைக்கவேண்டுமோ அது அவர்களின் விருப்பம் அதில் மார்கத்தின் பெயரால் தலை இட யாறுக்கும் உரிமை இல்லை
ReplyDelete@ NIYAS
ReplyDeleteநீங்கள் வேலை பார்க்கும் நாட்டில் பெண்கள் வழிகேட்டில் போயிருக்கலாம் அனால் இலங்கையில் அவ்வாறல்ல நிகாப் ஒரு வெட்கத்தின் அடையாளமாக பேணப்படுகிறது , முகத்தையும் கையையும் தவிர மற்றயவை மறைக்கொனும் ஆனால் இவை ரெண்டையும் மறைப்பது அவரவர் விருப்பு . ஆண்களுக்கு தொப்புள் முதல் முலங் கால்வரை மறைக்க வேனுமேன்பதால் நீங்கள் ஏன் ஷர்ட் போடுறீங்க அப்டின்னு கேடடா என்ன பதில் ?
ஹலால் முஸ்லிம்களுக்கு மட்டும் போதும் முன்னர் சொல்லி இப்ப ஹலாலே தேவல்ல என்றாங்க அது மாதிரி நிகாப் தேவல்ல சொல்லி அபாயவே வேணாம் என்பாங்க
கருத்து மாறான விசயங்கள் நம்மோடு இருக்கட்டும் , இந்த சந்தர்பத்தில் நம்மை எதிர்பவர்களை தக்க பதிலடி கொடுக்கொனுமே தவிர நம் இயக்க புத்திய காட்டக்கூடாது
ராத்தா அணிந்திருக்கும் உடையில் ஹிஜாப் மட்டும் தான் முஸ்லிம்களின் கலாச்சார உடை சாரி அன்னியக்கலாச்சற உடை இது தெரியாம ஹபாயவை கலட்டமட்டோம் என்று அறிக்கை விட்டிருக்கிரீகளே சமுதாயத்தை எங்கேதான் கொண்டு செர்க்கப்போரிர்களோ? அல்லாஹ் தான் அறிவான்.
ReplyDeleteமுகத்தை மறைப்பதாக இருக்கட்டும் அல்லது திறப்பதாக இருக்கட்டும். மார்க்கத்தைப் பற்றிய வரம்புகளை நமக்குச் வரையறை செய்து தருபவன் அல்லாஹ். அதன்படி நடப்பதற்கு வாழ்ந்து காட்டியவர் நமது கண்மணி நபி அவர்கள். எனவே நாம் மார்க்கம் என்று கருதுகின்ற அனைத்து விடயங்களிலும் நமது மனோ இச்சைகளைப் பின்பற்றுவதனையும், மனோ இச்சைகளின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மார்க்கம் அல்லாஹ்வுடையது. அதில் கூட்டல்களைச் செய்து நஸாறாக்கள் போல வழி கெட்டுவிடாமலும், குறைப்புக்ளைச் செய்து எகூதிகள் போல அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளாகி விடாமலும் இருப்போமாக. முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் நடுநிலையான சமூகம் எனக் கூறுகின்றான். எனவே அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை ஏற்பதோடு நமது மனோ இச்சைகளை மறுத்துவிடுவோமாக.
ReplyDeleteநமது சிந்தனைகளை விட்டு விட்டு அல்லாஹ் எதை மறைக்கச் சொன்னானோ அதை மறைபபோம் அவன் காரணத்தோடுதான் முகத்தையும் கைகளையும் தவிர என்று வரம்பு போட்டிருக்கின்றான்.வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
ReplyDeleteநமது சிந்தனைகளை விட்டு விட்டு அல்லாஹ் எதை மறைக்கச் சொன்னானோ அதை மறைபபோம் அவன் காரணத்தோடுதான் முகத்தையும் கைகளையும் தவிர என்று வரம்பு போட்டிருக்கின்றான்.வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
ReplyDeletecheck
ReplyDeleteஇஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்வதால் முஸ்லிம்கள் தனக்கு உள்ள இஸ்லாமிய உரிமைகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.முகத்தை மூடும் படி இஸ்லாம் ஒரு நாளும் சொல்லவிலை.முகம் மூட யாராலும் அந்த ஆதாரமும் காட்ட முடியாது .((((((( ஆண்கள் தொப்புள் முதல் முலம் கால்வரை தான் மூட வண்டும் ஏன் களிசான் போடவண்டும் என கேட்டல் அது வீன் வாதன் யாரும் அப்படி போட்டால் அது தப்பும் இல்லை ))))))
ReplyDeleteevargal ellam aattam Poduvathu endru netru vantha valku muraykku alla parambariya islathudaya valkykku evargalukku allah pothumanavan
ReplyDeletePPPP and YahyaMohammed உங்களுக்கும்,உங்களைப்போன்று கேள்வி கேற்போருக்குமாக இலங்கையிலும் நியாஸ் கூறியது போன்றவர்கள் பலர் உள்ளனர் ஒருத்தரின் குறைகளை மறைப்பதில் உள்ள நண்மைக்காக யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.,அத்துடன் முகத்தை மூடும் அனேகமான பெண்களிடம் நீங்கள் உங்கள் உறவினர்களை வைத்து ஒரு கருத்துக்கணிப்பெடுங்கள் அவர்களாகவா மூடுகிறார்கள் அல்லது கணவனின் வற்புருத்தலிலா?(நான் ஏற்கனவே கருத்துக்கணிப்பில் ஈடுபட்டமையினால் சொல்கிறேன்) இப்போதைக்கு மூடுகிற அனேகமான பெண்கள் ஒரு விவாகரத்து எனும் நிலையின் போது அவர்களின் நிலையை நன்றாக காண முடியும். இருப்பினும் ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன் முகத்தை மூடாத நல்லொழுக்கமுள்ள பெண்கள் தம் உறவினர்களுடன் செல்கின்ற போது செல்கின்ற போதும் நேர் பார்வை பார்த்ததை (தலையை தாழ்த்தியவர்களாக செல்கிறார்கள்) நான் இது வரை கண்டதில்லை ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் முகத்தை மூடிக்கொண்டு நல்லொழுக்கமுள்ள பெண்கள் தம் உறவினர்களுடன் செல்கின்ற போது தலையை நிமித்தயவர்களாக பார்வையை நாலா பக்கமும் செலுத்தியவர்களாகத்தான் செல்வதை கண்டிருக்கிறேன் சிலருக்கு அறிவுறுத்தியும் உள்ளேன்.,என்னில் பிழையிருந்தால் யா அல்லாஹ் என்னை திருத்திடுவாயாக,மன்னிப்பாயாக.
ReplyDeleteWe must follow Nabi Way Please try to understand. If he says there must be very important thing in the current and for the future.
ReplyDeleteTry to understand the true way.
அல் ஹாஸ் நீங்களே அல்லாஹ்வின் கட்டளைகளை பகிறங்கமாக மீறும் மனிதர் என்பதை வீதியால் செல்லும் கண்ட பெண்களும் எப்படி செல்கிறார்கள் என்பதை அவதானித்ததை இங்கே பகிறங்கமாக சொல்லி ஒப்பு கொள்கிறீர்கள் ஆக முஃமினான ஆண்களே உங்கள் பார்வையை தாள்த்திகொள்ளுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியாத உங்கள் ஈமானிய பழயீனத்துடன் நோட்டமிட்டால் எல்லாமே தப்பாகத்தான் விளங்கும் தஸ்கரையின் பிரபல முப்தியினதும் அவரது சகோதரரளான உலமாக்களினதும் தாய் அந்த காலத்திலேயே முகத்தை மூட அணுமதிக்காத கணவனை முகம் மூட வேண்டும் என்ற ஆர்வதிட்காகவே விவாகரத்து வாங்கி பேனுதலான உலமாவுக்கு வாழ்கைபட்டு முத்தான உலமாக்களை காரிகளை இந்த பூமியில் தவள விட்டிருக்கிறார்கள்
ReplyDeleteஅந்த பெண்ணுடைய குடும்பம் ஸ்ரீலங்காவின் மிக சிறந்த உலமாக்களை கொண்ட குடும்பமாக வாழ்வதட்கு காரணமே அந்த பெண்மணியின் பேனுதல்தான் ஆக உங்களை அல்லாஹ் தொப்புல் முதல் முழங்கால் வரை மறைக்க சொன்னதட்காக அதை மட்டுமா மறைக்கிறீர்கள் அதட்கு மேலால் சட்டையும் சேட்டும் ரவுசரும் டெனிமும் சாரமும் எதட்கு அணிகிறீர்கள் மறைப்பதைவிட கூடுதலாக மறைப்பது அல்லாஹ்வின் மார்கத்தை மீறுவதாக உங்கள் ஆடைகளைவைத்து தீர்பு கூற முடியுமா??
என்குடும்பத்திலே 50 மேட்பட்ட பெண்கள் இருக்கின்றனர் இதில் எந்த பெண்ணுமே யாருடைய வட்புறுத்தலினாலும் முகத்தைம்மூடவில்லை என்பதை அல்லாஹ்மேல் சத்தியமிட்டு அவர்கள் உங்களிடம் சொல்வார்கள் வருகிறீர்களா உண்மையை உணர கொஞ்சம் காத்தான்குடிக்கிபோய் அங்கே உள்ள பல்லாயிரம் பெண்களிடம் வினவிபாருங்கள் முகத்தை மூட யார் வட்புறுத்துகிறார்கள் என்று???
அந்த ஊரின் தலைவர்களும் ஜம்மியதுல் உலமா சபையும் கூட முகத்தை மூடி பயணிக்க வேண்டாம் என தீர்மானம் எடுத்த வேளை தாங்கள் முகமூடியே செல்வோம் அது எங்கள் உரிமை என்று முகத்தை மூடுவதை தடுக்க முணைந்த சக்திகளுக்கு தக்கபதிலடி கொடுத்து தங்கள் உரிமையை நிலைநாட்டிய வரலாறு உங்களுக்கு தெறியுமா???
நாம் நமக்கு தெறியாததை அனுமானத்தினாலேயே நம் கட்பனைபடியே இருக்கும் என்று நினைத்துகொள்கிறோம் ஆனால் முகம் மூடகூடிய பெண்கள் உறவினர்களாகவும் மனைவியாகவும் கிடைக்கையிலேயே முகம் மூடாத பெண்களின் நடத்தைக்கும் முகத்தை எக்காலமும் மூடும் பெண்களின் நடத்தைக்கும் உள்ள நளினமான வேறுபாடுகளை உணர்ந்து அறிந்துகொள்ள முடியும் என்ன செய்வது உங்களுக்கு அந்த பாக்கியங்களை அல்லாஹ் தரவில்லை இனியும் எங்கே தர போகிறான்??
ஆரோக்கியமான கருத்துக்கள். உண்மையில் சந்தோஷமாக உள்ளது.
ReplyDeleteஇது நமது உள் விவகாரம். கருத்துக்களை உள்வாங்கிய விதத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள். இதைப் பேசித் தீர்ப்பது நமது பிரச்சினை. ஆனால் இலங்கைப் பெண்ணான, முகத்தை மூடும் அந்தப் பெண்ணுக்கு உள்ள தனி மனித சுதந்திரத்தில் கை வைக்க நமக்கே அதிகாரம் இல்லை. எத்தி வைக்கலாம். பின்பற்றுவது அவரைச் சார்ந்தது. இப்படி இருக்க BBS ஓ NETH FM ஓ யார்? இந்தப் பெண்ணின் தனி மனித உரிமையில் கையடிக்க. சகோதரர்களே உங்கள் வாதங்கள் நியாயமானவை. ஆனால் இந்த இடத்தில் பொருத்தமில்லை. இப்படியே விட்டு விட்டால் எல்லா வற்றிலும் கைய்யடிப்பார்கள்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கோமாளிக் கூட்டம் யூத நரிகளாலும், ஷீயாகூட்டத்தாலும் இன்னும் நமது சமூகத்தில் உள்ள புல்லுருவிகளாலும் பலப் படுத்தப்பட்ட கூட்டம். இவர்கள் முன்வைக்கும் சர்ச்சைக்குரிய அனைத்து விடயங்களும் நமது இஸ்லாமிய சமூகத்துக்குள் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள். நமது சமூகம் ஒன்றுபட்டு எதிர்க்காதிருக்க அவர்கள் கையாளும் திட்டமிட்ட செயல். இந்த வலைக்குள் விழ வேண்டாம் சகோதரர்களே. சிந்திக்கும் மக்களாகும் வரை நமது இருப்பை இஸ்தீரணப் படுத்துவது கடினம்.
@ Yahya Mohammed ஐயா நீங்கள் ரசித்து ருசித்து கை--ல போடாமல் இருப்பதற்காகத்தான் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூறுவீர்களானால்.
ReplyDeleteநீங்கள் இஸ்லாத்தை பற்றிய சிந்தனையோ அல்லாஹ்வையும் அவனது போதனைகளையும் கடை பிடிக்காத ஒருத்தனாகத்தான் இருக்க முடியும்.
இஸ்லாம் நமக்கு சொல்கிறது "நீங்கள் பெண்களை ஒருமுறை பார்ப்பது கலாலாகும் கை --ல போடுற நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பார்ப்பது ஹராமாகும்" என்று.
நீங்கள் ஹலாலை பின்பற்றி ஹராமான விசயங்களிலிருந்து விடுபட எல்லாம் வல்ல அல்லஹ்வை வேண்டிக்கொள்கிறேன்.
Niyas நீங்கள் மட்டும் ஒரு முறை பெண்களை பார்பது "முறை" சடுதியான பார்வை அல்ல தெளிவாக முழுமையாக கவனித்தல் என்ற பொருள் படும் ஒரு முறைபார்தல் ஹலாலாகும் என்று அல்லாஹ் கூறியதாக நிரூபித்தால் நான் கிருஸ்தவனாகிவிடுகிறேன் என் சவாளை ஏற்றுகொள தயாரா??? உங்கள் வக்கிரத்திட்கு அல்லாஹ்வையே துணைகழைக்கிறீர்கள்????
ReplyDelete