நிலநடுக்கங்களால் தங்கமாக மாறும் தண்ணீர்..!
நிலநடுக்கத்தால், பூமிக்கு அடியில் இருக்கும் நீர், தங்கமாக மாறுவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் சார்பில், பூமியில், நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும், நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதனால், நீர் மூலக்கூறுகள், வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம், பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக, மேலும் சில தனிமங்களுடன் வேதிச்சேர்கையில் ஈடுபடுகின்றன. இதனால், பல மாற்றங்களுக்கு பின் நீரானது, தங்கமாக மாறுகிறது. சாதாரணமாக, இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. ஆனால், நியூசிலாந்தில் நிலவும் சாதகமான, தட்ப வெட்ப நிலையின் காரணமாக, வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது.சில நூறு ஆண்டுகளுக்கு பின், நியூசிலாந்தில், ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ithu marumaiyyin adayalangalil ondru. ittha kullah
ReplyDeleteநைல் நதியை ஆய்வு செய்தால் மறுமைக்கான மற்றுமொரு ஆதாரம் கிடைக்கும். subhanallah
ReplyDelete