Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் குறித்து கட்டார் அரசு விளக்கம்



இக்வானுல் முஸ்லிமீன்களை கத்தர் அரசு ஊட்டி வளர்க்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கத்தர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மட்டுமே தாம் தொடர்பு கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

மல்லிகை புரட்சிக்குப் பின் அரபுலகில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. துனிசியா, லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளுக்குப்பின், எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதற்கு முன் எகிப்து அதிபராக இருந்த முபாரக்கோடு நெருங்கிய உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை தற்போதைய எகிப்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. தற்பொழுது அமீரக அரசை கவிழ்க்க முயன்றதாக இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சார்ந்தவர்கள் என நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அரபு நாடுகளில் கத்தர் மட்டும் இக்வானுல் முஸ்லீமினுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உலவுகிறது. அதற்கேற்றார் போல் எகிப்தின் முர்சியோடு நெருங்கிய உறவு வைத்து கொண்ட கத்தர் அதிபர், சமீபத்தில் கூட பலஸ்தீனில் உள்ள ஹமாஸ் பிரதமரை நேரில் சந்தித்து பேசினார். ஹமாஸின் தாய் அமைப்பு இக்வானுல் முஸ்லிமீன் என்பது குறிப்பிடத்தகக்து.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கத்தர் அரசு, தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுடன் தான் தொடர்பு வைத்துள்ளதாகவும் எத்துணை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஈரான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் நட்புறவு பேணவே கத்தர் விரும்புகிறது என்றும் கூறியுள்ளது. மல்லிகை புரட்சியின் போது போராட்டத்தை முன்னிலைப்படுத்திய அல் ஜஸீரா டிவி கத்தரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.inneram

No comments

Powered by Blogger.