Header Ads



இலங்கையின் மிருகங்கள் வெளிநாடு செல்கின்றன..!


மிருகங்களைப் பரிமாற்றும் திட்டத்தின் கீழ், நாடுகள் சிலவற்றின் மிருகக்காட்சிசாலைகளுடன் மிருகங்களை பரிமாற்றிக்கொள்ள தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மிருகங்களை பரிமாற்றிக்கொள்ள உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.

இந்தியாவின் டில்லி மிருகக்காட்சிசாலைக்கு அனகொண்டாக்கள் வழங்கப்படவுள்ளன. அதற்குப் பதிலாக இந்தியாவிலிருந்து மான் இனங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளன.

ஜப்பான் நகோயா மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையிலிருந்து சிறுத்தை ஜோடியொன்று வழங்கப்படவுள்ளதுடன் ஜப்பானிலிருந்து 5 பென்குயின் ஜோடிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதுதவிர சீனாவின் மிருகக்காட்சிசாலையுடனும் மிருகங்கள் பரிமாறப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. nalla welaithan intha mirahakkoottattunan Budubalasena amaippin leaderaium anuppina rompa nalla irukkum

    ReplyDelete

Powered by Blogger.