சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
(KRM.றிஸ்கான்)
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவத்திற்கான பணிப்பாளர் ஏ.சீ.யஹியாகான், சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்;.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வருட சம்பியனாக சன்(மஞ்சள்) இல்லம் 310 புள்ளிகளைப் பெற்று தெரிவானது. இரண்டாம் இடத்தினை மூன்(பச்சை) இல்லம் 244 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகளுக்கும், இல்லங்களுக்கும் அதிதிகளினால் வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முஸ்லிம் காங்கிரசின் இலக்கற்ற அரசியலுக்காக அதனை வெறுக்கும் ஒரு கட்டமாக காங்கிரஸ் சார்ந்த பிரமுகர்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில் இருந்து தவிர்ந்து கொள்வது எமது உணர்வுகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம்.
ReplyDelete