Header Ads



பெண் பிள்ளைகளை கடத்த முயன்ற வேன் மக்களால் மடக்கிப் பிடிப்பு!



(றாஸிம்)

கணவன்-மனைவி பிரச்சினை மூலம் பிரிந்த தாய் தன்னிடத்தில் தனது இரு பெண் பிள்ளைகளையும் வைத்திருக்க மறுத்த போது நீதிமன்ற உத்ததரவின்படி தந்தையிடத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் தனது பிள்ளைகள் மீது வைத்திருந்த பாசத்தின் காரணமாகவோ தெரியாது குறித்த தாய் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நன்பகல் 12.00 மணியளவில் பிரிந்த கணவனின் வளர்ப்பில் இருந்த இரு பெண் பிள்ளைகளை கணவனுக்கு தெரியாமல் வேன் மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட போது விரட்டி வந்த ஊர் மக்களிடத்தில் குறித்த வேன் எதிரே வந்த வேளாண்மை வெட்டும் மெஷினை கடந்து செல்ல முடியாமல் அகப்பட்டுக் கொண்டது. 

அந்த வேளை முடக்கிப் பிடிக்க விரட்டிய மக்களுக்கு இலேசாக அமைந்ததால் அந்த வேனில் சென்றவர்களை மக்கள் அடித்து பெரும் பிரச்சினையை உன்டு பன்னினர்.

குறித்த வேனுக்கு சாரதிகளாக இருந்த ஒரு முஸ்லிம் நபருக்கும் இந்து நபருக்கும் இந்த விடயம் குறித்து எதுவும் தெரியாது என எம்மிடம் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்; "எங்களை அவர்கள் வாடகைக்கே கல்முனைக்கு செல்வதாக அழைத்து வந்தனர். ஆனால் இப்படி பிரச்சினை உண்டு என எமக்கு தெரியாது " என்று அவர்கள் கூறினர்.

அந்த வேனில் இரு பெண்கள் அந்தப் பெண்களுக்குத் துணையாக ஒரு வாலிபர் உட்பட ஐவர் பிரயாணம் செய்தனர். பிறகு இவர்கள் மத்திய முகாம் பொலிசிற்கு பொலிஸ் அதிகாரிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.



No comments

Powered by Blogger.