வெளிநாட்டிலுள்ள பேராசிரியர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பது வேடிக்கையானது
நாட்டிலுள்ள விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காத அரசாங்கம் வெளிநாட்டிலுள்ள பேராசிரியர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பது வேடிக்கையானதென முஸ்லிம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு மேலும் பேசுகையில்;
வெளிநாட்டிலுள்ள பேராசிரியர்களை இலங்கை வருமாறும் அங்கு பெறும் வருமானத்தை இங்கு பெறமுடியுமெனவும் அதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் அரசாங்கம் அழைத்துள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துடன் பேசாத நிலையில் வெளிநாட்டிலுள்ள பேராசிரியர்களை அழைப்பது வேடிக்கையானது.
இவர்கள் இங்கு வந்தாலும் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டி வரும்.
வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பேராசிரியர்களுக்கு இங்கு பெற்றோர், சகோதரர் மற்றும் காணியிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்காது குடியுரிமை வழங்குவதா இல்லையாயென அமைக்கப்பட்ட குழு முன்னால் ஆஜராகச் சொல்வது அவர்களை அசௌகரியப்படுத்தும் செயல். இதுகுறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டுமென்றார்.
muthalil padithu vittu wali attirukkum pattatharihalukku nalla walium nalla sampalamum kututthu vittu valinattil ullori patti pasu.
ReplyDeleteஜாதி பேதம் வேண்டாம் என்று வங்குரோத்து விவாதம் செய்கின்ற அசாத் சாலி கூட, அவரின் கட்சிக்கு "முஸ்லிம் தமிழ் " என்றுதான் முதலில் பெயர் நாமம் சூட்டிஉள்ளார். ஆக அசாத் சாலி கூட ஜாதி பேதம் வேண்டாம் என்று பேச தாகுதி அற்றவர்தான். அசாத்துக்கு இப்போது தேவையெல்லாம், தன்னை தானே தலைவர் என்று விழம்பரம் செய்வதுதான் அல்லாமல் சமூகத்துக்காக என்பது கூட ஒரு சும்மா வெறும் பூச்சாண்டி. ஏனெனில், தான் கொழும்பு மாநகர பிரதி முதல்வராக இருந்தபோது எதுவும் முஸ்லிம் சமூகத்துக்காக சாதிக்காது சும்மா வெறும் பலூன் மாதிரி இருந்து சுக போகங்களை அனுபவித்துவிட்டு, தற்போது எந்த அரசியல் பலமோ, அதிகாரமோ அற்ற நிலையில் வாயழக்குறார் இந்த சாலி. சென்ற கிழக்கு மாகாண சபையில் கூட ஒரு உதாரணம் உண்டு, தான் தேர்தால் கழத்தில் நிற்பதற்காக அவருக்கு SLMC தேவைபட்டது அந்த கட்சியை நல்ல சமூக கட்சி என்று பறையும் சாட்டினார். தோற்ற பிறகு SLMC யை தூற்றினார். அப்புறம் தனக்கொரு கட்சி அதற்கு தான்தான் தலைவரும் கூட. இந்த சாலியும் ஒரு, பௌசி, அலவி மௌலாநா, போன்றோர் வரிசையில் இவரும் ஒருத்தர் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
ReplyDelete