Header Ads



விண்வெளி ஆய்வுக்காக கால்பந்து மைதான அளவில் ராட்சத டெலஸ்கோப் தயாரிப்பு


விண்வெளியில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்ளை கண்டுபிடிக்க அதி நவீன டெலஸ்கோப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தும் தற்போது விண்வெளியில் முழு ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து மிகப்பெரிய ராட்சத டெலஸ்கோப் தயாரித்து அதை நிறுவி வருகின்றனர்.

அந்த டெலஸ்கோப் கால்பந்து மைதானம் அளவுடையது. அதன்மூலம் வானத்தில் உள்ள சூரிய மண்டலம் மற்றும் அனைத்து கிரகங்கள், அதை சுற்றியுள்ள நட்சத்திரங்கள் குறித்து அறிய முடியும். இந்த ராட்சத டெலஸ்கோப் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் செரோ அமேசான் மலையில் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் வைத்து கட்டப்படுகிறது.

இப்பகுதி சிலி நாட்டின் அடாகமா பாலைவன பகுதியில் அமைந்துள்ளது. இப்பணியில் இங்கிலாந்து உள்ளிட்ட 14 ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்காக ரூ.700 கோடி செலவிடப்படுகிறது. 39 மீட்டர் அகலமுள்ள இதன் லென்ஸ் மூலம் தற்போதுள்ள டெலஸ்கோப்பை விட 16 மடங்கு பெரியதாகவும், அதிக அளவிலும் விண்வெளி ரகசியங்களை கண்டறிய முடியும்.

இந்த அதி நவீன ராட்சத டெலஸ்கோப் வருகிற 2023-ம் ஆண்டில் செயல்பட தொடங்கும். 

No comments

Powered by Blogger.