இலங்கைக்கு ஜெனிவாவில் தோல்வி - ஒபாமா வரவேற்பு
இலங்கைக்கு எதிராக நேற்றைய தினம் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகையின், தேசிய பாதுகாப்பு பேரவை பேச்சாளர் டொமி வைடோர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீளமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அரசாங்கத்தின் பொறுப்புடைமை தொடர்பில் வலியுறத்தும் இந்த யோசனையை பராக் ஒபமா வரவேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தமையையும் அவர் பாராட்டியுள்ளார்.
Post a Comment